Sunday, December 25, 2011

மௌன சாட்சி

பொரை ஏறிடும் தருவாயில்
வந்து விழும்  வார்த்தைகள் ..
அன்புக்குரியவர்கள் யாரும்
நினைத்திருக்கலாம்  என்பதாக ....
நீதான்....என்பது தெரியுமாதலால்
துடைத்துக் கொள்கிறேன் தண்ணீரை
கடைவாய் உதிக்கிற புன்னகையும் சேர்த்து !!!..

Thursday, December 22, 2011

பா(ர்)வை

தொடுகையில் விரலிடை நிரடுகிற நீறும்,குங்குமமும் எப்படி வந்ததென்றுதான்
இது வரை  புரியாதிருந்தது...
இதோ இந்த நெரிக்கிற பார்வையின்
அர்த்தம்  கூட  ....



Monday, December 19, 2011

நறுமுகை ...

எனது விழித்திரை நிறைத்திடும்
உனது பிம்பங்களில்
நான் உள் நுழைகையில்
நெற்றி நெரித்து
இமை விரித்து,
இதழ் பிரித்து,
மெல்லிய  புன் முறுவலுடன்  .
அளித்துச் செல்கிறாய் - ஒரு  
சிவப்புக் கம்பள வரவேற்பை ....

Sunday, December 11, 2011

துரத்திடும் விரல்கள்

ஆளரவமற்ற பின்னிரவு வேளைகளில் 
திரையங்கின் மெல்லிய இருளில்,
தொலை தூரப் பேருந்தின் பின்னிருக்கைகளில்,
துரத்தியபடியே இருக்கின்றன சில விரல்கள்

துரியோதனன்
பிளந்த இடத்தில் தாளமிடும் அவை
மெல்ல உள்நுழையும்
கொடிய தருணங்களில்
திடுக்கிட்டுக் கண் விழிக்கிறேன்
தட தடக்கத் துவங்கிய இதயம்
இன்னும் வேகமாய் துடிதுடிக்கிறது .

உற்று நோக்கிடும் முகங்களும்,
நீல நாகம் குறித்த புறங்கையும்,
ஒற்றை கடுக்கன் தரித்த காதும்,
உயிர் கொண்ட உறவுகளும் அத்து மீறும்
நீள் நகம்  கொண்ட இரவுகளும்,
நரகமாக்கும் வாழ்வை - கடந்து போகையில்

மடியமர்த்தப்படும் கைப்பை கொண்டு
கடந்து விடுகிறேன் -பேருந்துப்  பயணங்களை..!

திடகாத்திர நண்பர்கள் துணையுடனே
சமாளிக்கிறேன்- திரையரங்க தருணங்களை!

சாமர்த்தியமாக தவிர்த்துவிடுகிறேன் 
இரவுகளின் வெளித் தங்கலை..!.

நிசப்தம் கிழித்து தடதடக்கிற
தொடர் வண்டியின் இரவுப் பயணங்களில்,
உறங்கும் வழிதான் புரிபடவில்லை !!!


 

'நிலை'ப்"பாடு"

உன்னை அழ வைத்திடலாம். 
மெல்லிய  இதயம் சிதைந்திடலாம் ..
புன்னைகைப் பூக்கள் உதிர்ந்து போகலாம் ...
உயிரின் நீளம் குறைந்து போகலாம் ....
என்றே என் காதலை மறைத்து வைக்கிறேன்
உயிரின் ஆழத்தில்  புதைத்து வைக்கிறேன்
உன் நினைவை மறக்க மட்டும்
மறந்து போகிறேன்  -தினமும்
இறந்து பிறக்கிறேன்.

சமர்ப்பணம் ...

நீ உதிர்த்துச் செல்கிற
இந்த புன்னகைப் பூக்கள்
எனக்கானவை அல்ல
என்பது தெரிந்தே இருந்தும்
சேகரித்துக் கொள்ளுகிறேன் - என்றேனும்
 நீ கண்ணீர் சிந்துகிற தருணங்களில்
உனது காலடியில் சமப்பிப்பதர்க்காய்!!!!!

Wednesday, December 7, 2011

புதிர்...


நீ ஒரு புரியாத புதிர் -என்று சொன்னார்கள்
புரிந்து கொள்ளவே இயலாத
புதிரொன்றும் இல்லை - என்று  எண்ணி ,
உன்னைப் புரிந்து  கொள்ள முயல்கையில்
தெளிவாய்ப் புரிந்தது எனக்கு
நீ புரியாத  புதிரொன்றும் இல்லை ..- யாரும்
புரிந்து கொள்வதை விரும்பாத புதிரென்று ...
யாருக்குமே விளங்காத புதிர் உன்னை
நான் மட்டும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் 
புதிர்தான் விளங்கவில்லை இன்னும் ....



மகி (குமி )ழ்வு

காற்றுக் குமிழ் கைகளினின்றும்
மோதி உடைபடும் புள்ளி 
நம் மகிழ்வின் எல்லை
இன்னொன்றை  ஊதி
அனுப்பிடும் எத்தனிப்பில் 
சிறு குழந்தையின்  உலகம் .....

Wednesday, November 23, 2011

மடிக்கணிணி!!!

விரல்களின் இடைவெளியில் விரிகிறது ஓர் உலகம்
எனது கற்பனை உலக,
அதன் விரிந்த சிறகுகளுடன,
தொடர்கின்ற கனவுகளுடன் ....
தொடர்கின்ற மடிக்கணின,
காலயந்திரத்தின் 
நவீனத்துவம் !!!


Tuesday, November 22, 2011

தமிழகமே! தமிழகமே !!

தமிழக மக்களுக்கு ஓர் அறிவிப்பு ! அடுத்த ஒரு வாரத்திற்கு பின் வரும் நிகழ்வுகள் , பகுதியாகவோ , மொத்தமாகவோ பாதிக்கும் வாய்ப்புண்டு. ...மக்கள் ஆங்காங்கே பத்திரமாக இருந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

1.கடந்த ஆட்சியில் அருங்காட்சியகத்திலிருந்து காணமல் போய் , பரிதவித்த கண்ணகி சிலை  மீட்கப்பட்டு , மீண்டும் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டு , பத்திரமாக  வைக்கப்பட்டது .

2.கன்னியாகுமரியில் அதியசம் ..ஒரே இரவில் திருவள்ளுவர் சிலை மாயமாகி அந்த இடத்தில் இதய தெய்வத்தின் 150  அடி உயர சிலை எழுப்பப் பட்டிருந்தது

3.தமிழகத்தில் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப் பட்டிருக்கும் அறிவாலயங்கள் , பச்சை நிற பெயிண்ட் அடித்து , அன்னை ஆலயமாக மாற்றப்படாவிட்டால் , இடித்துத் தரைமட்டமாக்கப்படும் .

4.இனி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில்   பச்சை நிற உடையே சீருடையாக்கப்படும். மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள்

5.இனி தமிழக மக்கள் அனைவரும்  'பச்சைத்  தண்ணீர், பச்சை பால்' மட்டுமே அருந்த வேண்டும் , மீறி காய்ச்ச நினைத்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் ..முட்டையையும், பச்சையாகவே குடிக்க வேண்டும் .


6.'பச்சைத் தமிழ்' பேசுகிற படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப் படும் .

7.'பச்சைப்' பொய்யர்கள் தகுதிக்கேற்ப கலைமாமணி விருதுக்குத் தேர்தெடுக்கப்படுவார்கள்.



 

Sunday, November 20, 2011

சார் ...டிக்கெட் ...டிக்கெட் ...


தமிழகம் முழுவது ம் பேருந்து கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளது ..என்பதறிவீர்கள் ..
.( இப்போது தலைப்பு புரிகிறதா ?)...இன்று கடலூரிலிருந்து  ..திட்டகுடி செல்ல 310  பிடித்தேன் ....கைக்குட்டை ..குடை ..மஞ்சள் பை ..குழந்தை !!!!வைத்து  இடம் போட்டிருக்கும் பேருந்தில் .ஒருவர் கூட ஏறியிருக்கவில்லை!! ...பக்கத்தில் விருத்தாசலம் செல்லும் தனியார் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது..  ..பேருந்து கட்டணம்   இருமடங்கு  உயர்ந்திருப்பது தெரிந்தும் , உட்கார்ந்து செல்லலாம் ..என்பதால் ,அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்தேன் ...பஸ் பாதி நிரம்பி , நகரத்துவங்கி ,நடத்துனர் வந்து டிக்கெட் கேட்டார் ..27 *2 =54 ..ஆனால்  53 தான் வாங்கினார்.(ஏமாற்ற வில்லை !!அதாவது டிக்கெட் விலை சரியாக இரண்டு மடங்கு இல்லை எனப் புரிந்தது  ..எனக்கு ஒரு ரூபாய் கம்மி ..)
. அட ஒரு ரூபாய் லாபம் என எண்ணிய வேளையில்...விருத்தாச்சலத்திற்கு டிக்கெட் கேட்ட  பக்கத்து இருக்கைக்காரர் விலையைக் கேட்டு ஏகத்துக்கும் டென்ஷன் ஆனார் ..( என்ன சார் படைப்பா நீலாம்பரி போல வெளி உலகமே தெரியாம இருக்கீங்க !!)..கடலூரிலிருந்து விருத்தாசலம் வரை  ஆளுங்கட்சி மற்றும் மாண்புமிகு அம்மையாரை  நல்ல வார்த்தைகளில் ஆரம்பித்து ஏக வசனம் ..அச்சில் ஏற்ற முடியாத வசனங்களில் கிழி கிழியென கிழித்தார் .....( நல்ல வேளை காதில் இயர் போனை மாட்டிக்கொண்டு விட்டேன் ..இருந்தும் காதிலிருந்து  இலேசாக தக்காளி சாஸ் எட்டிப் பார்த்தது .) ..நடத்துனர்  பத்து- இருபது ..இருபது - நாற்பது ,,இருபத்தைந்து - ஐம்பது ,என பிளாக் -ல் டிக்கெட் விற்கிற மாதிரி , அடித்து நகர்த்திக் கொண்டிருந்தார்....ஒரு கட்டத்தில் இலேசாகத் துவங்கிய சலசலப்பு ..வாக்குவாதமாகி ..கைகலப்பு நிகழக்கூடும் என அஞ்சத்  தோன்றியது ...ஒரு நபர் "கும்பகோணம் டெப்போ பஸ்ல 12  ரூபா தான் வாங்குனாங்க ,,, நீங்க 16  ரூபா கேட்குறிங்க ...வை , ஐ  வான்ட் டீடைல்ஸ் ?" என்க, "சார் இதான் எங்க டெப்போ நம்பர் ,,வேணும்னா கேட்டுக்கங்க " என கண்டக்டர்  கொடுத்த ..டெப்போ நம்பருக்கு போன் போட்ட நபர் .. "என்ன சார் பிஸி யாவே இருக்கு?"  என்றவர், கண்டக்டர் " உங்களை மாதிரி எத்தனை பேர் ட்ரை பண்றாங்களோ?" என்றதும் அடங்கிப் போனார் ..கண்டக்டர் எங்களிடம் திரும்பி "சார் ...நாங்க என்ன சார் பண்ணுவோம் ..எல்லாரும் நாங்க கொள்ளை அடிச்சி வீட்டுக்குக் கொண்டு போற மாதிரி கேள்வி கேட்குறாங்க !! இப்போ  கூட வயசானவங்க , ரொம்ப முடியாதவங்க னு தெரிஞ்ச ரெண்டு பேருக்கு டிக்கெட்டே போடலை .." என நெகிழ வைத்தார் ..(சே ... வினு சக்கரவர்த்தி மாதிரி அவ்வளவு பெரிய மீசை வைத்த .கண்டக்டருக்கு  இருக்கிற பாசம் கூட ...எல்லாரும் "அம்மா' அம்மா" என்று அன்போடு அழைக்க வேண்டும் என எதிர்பார்க்கிற அம்மையாரிடம் இல்லையே ...).அதன் பிறகு  எல்லாரின் கோபமும் அரசாங்கம் பக்கம் திரும்பியது .ஒரு நடுத்தர வயதுக்காரர் .."என்ன சார் ரெண்டு மடங்கு விலை ஏத்தி இருக்காங்க ...ரெண்டு ரூபா மூணு ரூபா ஏத்தி இருந்தா நமக்கு சுமை தெரியாதுல்ல" என்றார் .எம் . ஜி . ஆர் பெயர் கையில் பச்சை குத்தியிருந்த ஒரு கிழவி " நம்ம எம்ஜாரு கட்சியிலையா வெலைய ஏத்துனாக ( பாட்டி!!! அவரு போய் சேர்ந்து இருபது வருஷம் ஆகிப் போச்சு , இன்னமும் அவருக்கு தான் ஓட்டுப் போடுரீங்களா..வ்!!!!)   ஒரு கிராமத்து பெரியவர் .."ஏன்டா காசு வாங்கி , ஓட்டு போடாதிங்கடா - னு சொன்னா எவன்டா கேட்டிங்க..இப்போ அனுபவிக்கிறிங்க" பின்னாலிருந்து ஒரு குரல் " அதான் பாக்கெட்,கவர் லாம்   கரெக்டா வாங்கிநீங்கள்ள? " என நக்கலாக  ஒலித்தது ..எல்லாரும் ஏக காலத்தில் திரும்ப ,, குரலுக்குச் சொந்தமான கரை வேட்டிக்காரர்  பம்மி, தூங்குவது போல பாவ்லா செய்தார் ...இன்னொருவர் ...."சார் இவங்களை யார் சார் இலவச மிக்சி, கிரைண்டர் , லேப்டாப் - லாம் குடுக்கச் சொன்னது ..இப்போ டிக்கெட் விலை ரெண்டு மடங்கு ஏறிப் போச்சு !"என்றார் .( மேடம் நீங்க ஜெயிச்சுட்டிங்க ...இலவச மோகம்   ஆட்டிப்  படைக்கிற அடித்தட்டு மக்களிடமிருந்து ..இலவசம் வேண்டாம் என எண்ண வைத்திருக்கிறீர்கள் ! நீங்கள் சிறந்த ராஜ தந்திரிதான்) ...இந்த ரண களத்திலும் சில விஷயங்கள்...புல் போதையில் மட்டையாகி, கண்டக்டர் டிக்கெட் கேட்டதும் சட்டைப் பை காண்பித்து எடுத்துக் கொள்ளச் சொன்ன குடிமகன் ... பட்டன்களை கழட்டி விட்டு , ஐம்பதில் ஆக்சிலேட்டரை நிலை நிலை நிறுத்தி , ஹாயாக வெளியே  வேடிக்கை பார்த்தபடி வண்டியோட்டிய டிரைவர் ...தவிர எல்லோர் முகத்திலும் ஓர்  இறுக்கம் காணப்பட்டது !! என்ன செய்வது ...க்கு ..பட்டா .குலைச்சு தானே ஆகணும் !....

Monday, October 24, 2011

நகர' நேரம் !

கணினியை உயிர்பித்து அது இயங்கிடும் இடைவெளியில்
ப்ளூடூத்  காதணி  மாட்டிய  உடையாடலும் ,
இடது கை தாங்கிடும் அலைபேசியில் குறுஞ்செய்தியும்,
வலது கையில் காபி கோப்பையும்,
நிரப்பிடும் இடைவெளியில் நகர்கிறது...
பயணங்களிடை திரைப்படம் பார்த்து முடிக்கிற 
 துரித உணவுக் காலம் !!....
 !



காரணி ..

மறுமுறை உனைப் பார்ப்பேன்.
மூச்சுக் காற்றில் வெப்பம் கூட்டுகிற, 
இதயத் துடிப்பைக் கூட்டிச் செல்கிற,
உயிரை ஊடுருவும்   உன் பார்வையுடன் !!!!
மறுமுறை உனைப் பார்ப்பேன்..
என்றே வாழ்கிறேன் - இன்றும்
நேற்றைப் போல் ....

Sunday, October 23, 2011

"நிகழ்" காலம்

 கடக்கும் இந்த நொடியைப் போலவே
கடந்து செல்கின்றன
மீளாத்துயர்  நிகழும்
அந்த கொடிய தருணங்களும் !!!

"வருகைப் பதிவு "

ஒரு புயலென கடந்து சென்று விடுகிறாய் ..
அந்த  நொடிகளைச்  சேகரித்து,
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
எனது நியூரான்களின்  நீட்சிகளில் ...
அந்த நொடிகளுக்கீடாய்
ஒரு புன்னகையோ ,
உயிர் உருக்கிடும் ஓர் பார்வையோ!

திருப்பித்தருவாய் என்பதற்காய்!!!!

 

 
..

Saturday, October 22, 2011

காலக் கண்ணாடி

அது தான் நான் உன்னைப் பார்க்கும்
கடைசி தடவை என,
முன்பே தெரிந்திருப்பின் ,


இன்னுமொருமுறை
திரும்பி பார்த்திருப்பேன்!!!


Friday, October 21, 2011

மாறு களம் !!

பேருந்து நிலையங்களில்,
நிலவு தெரிகிற மாலை நேரங்களில்
ஒற்றையாய் வாயில் பார்த்தபடி
கைகள் கட்டி  நின்று, 
பரிதவிப்புடன்  காத்திருக்கிற பெண்,
மேய்ந்து சென்றிடும் ஆண்களின் கண்களில்
கௌரவர்  சபையில் துரௌபதை!!!




பிரிதல் நிமித்தம்

நீ விடைபெற்றுப் போகும்
அந்தத் தருணத்தை
நினைவில் ஓட்டிப் பார்த்து,
கடக்க முயன்று கொண்டிருக்கிறேன் ,
நீரில் தத்தளித்து ,
வெளியேறத் துடிக்கிற
சிறு நாய்க் குட்டியாய் !!

ஸ்கேன் .....

நேற்று ஓட்டுப்  போட்ட கதையைச் சொன்ன சுவாரசியத்தில் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன் ...ஓட்டுப் போடக் கிளம்புகையில் , தயங்கியபடியே பக்கத்து வீட்டுப் பெண்மணி வந்தார் .." ஏம்பா , நம்ம தாலுக்கா ஆஸ்பத்திரியில புதுசா ஒரு மிஷினு ஏதோ வந்துருக்காம்ல , அதுல படுக்க வச்சு உள்ளார போயி வெளிய வந்தா , பார்ட்டு பார்ட்டா ( இங்க்லீஷ் !!!)படம் புடுக்கிமாமே, பக்கத்து ஊர்ல ஏருக்கோ ஒத்தத் தலைவலி இருந்துச்சாம் , அதுல ஏறிப் படுத்த பொறவு சரியாகிருச்சாம் ..( என்ன சொல்ல வருகிறார் ... ஒரு வேலை காந்தப் படுக்கை மாதிரி எதாவதா ? )..இன்னொருத்தருக்கோ சக்கர வியாதி சுத்தமா குணமாகிருச்சாம்.. ( நிலைமை விபரீதமாவதை உணரத் துவங்கினேன் ,).. 500 ரூபா வாங்குராகலாம் ..முக்கியமானவுக கையெழுத்துப் போட்ட இனமாவும் எடுப்பாங்களாம் ( ஒரு வேலை கையெழுத்து எதுவும் கேட்கிறாரா?) .."அம்மா உங்களுக்கு என்ன வேணும்னே புரியலையே ", "அதில்லைப்பா, எனக்கு கூட கட்டி பார்த்து ( கட்டி பா..ர்..த்...து ..ஓ B.P யா ,)  பிரசர் இருக்கினு சொன்னியேப்பா !, நான் ஒரு தடவை அந்த மிஷினுக்குள்ள போய் வரவாப்பா ( ஏம்மா , அது என்ன துணிக்கடையா!!!!எல்லாரும்  போய் வர .) எப்படி ஆரம்பிப்பது ..."சரி , உங்களுக்கு பிரஷர் தவிர வேற  ஏதும் தொந்தரவு இருக்கா?" .." என்ன தம்பி இப்படிக்  கேட்குறிங்க , ராத்தரியில  எல்லாம் கை, கால் கொடைச்சல் , உடம்பெல்லாம் ஒரே வலி .." பகல்ல "- இது நான் .."  கருக்கல்ல எந்திருச்சி வேலைக்குப் போனா திரும்ப  வர ராத்திரியாய்டும்",  ( அப்புறம் கை,கால் கொடையாம என்ன செய்யும்) .."சரி சுகர்.. ம்.. இல்ல சக்கர" .."அதான் நம்ம  ஊரு டாக்டர் ( Might be one of the leading QUAKE )மருந்து கொடுத்து சக்கர ..பூரணமா  பூடுச்சே"  ( என்னமா சொல்றிங்க ,  complete cure !!!!).. "அதை விடுங்க தம்பி , அந்த மிசினுக்குள்ள போகவா வேண்டாமா ?" ,(விட மாட்டிங்க போல) கரும்பு மிஷினுக்குள் மாட்டியது போல விழித்த நான் , "அதில்லை அம்மா ," என ஆரம்பித்து ,CT SCAN
எப்போலாம் செய்யனும் , என்னென்ன கண்டுபிடிக்கலாம் , RADIATION பத்தியெல்லாம்
( இன்னமும் எனக்கு SURE-ஆத் தெரியலை, CT SCAN ???!! )...விலாரியாகப் பேசியதை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டே வந்தவர் ,.அப்படினா வேணாம்னு  சொல்றியா ? என ஏமாற்றமாக கேட்டுச் சென்றவர் ,,,வீட்டை விட்டு வெளியில் சென்றதும் , பக்கத்து வீட்டு ப் பெண்மணியிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார் .." நம்ம நம்ம தாலுக்கா ஆஸ்பத்திரியில புதுசா ஒரு மிஷினு ஏதோ வந்துருக்காம்ல , அதுல படுக்க வச்சு உள்ளார போயி  வெளிய வந்தா , பார்ட்டு பார்ட்டா ( இங்க்லீஷ் !!!)படம் புடுக்கிமாமே...வா ஒரு எட்டு போயி  என்னனு பார்த்துட்டு வந்துடுவோம்...சிறுவாட்டுக் காசு ஐநூறு ரூவா இருக்கும் ..அப்பிடியே ஒரு ரூவா குடுத்து சீட்டு வாங்கினா(!) குளுகோசும் ஏத்துவாங்கலாம்!!! ( ஒரு வழியாக ஆள் தேற்றியாகிவிட்டது ), நம்ம தம்பி கிட்ட கேட்டேன் ஏதேதோ சொல்லுது , அது இன்னம் படிச்சிகிட்டு தானே இருக்கு , விவரம் போதாதில்லை "( யாருக்கு எனக்கா ? அது சரி !!!)


விஷயம் இதுதான் : எங்கள் ஊருக்குப் பக்கத்தில் வட்ட மருத்துவமனையில் புதிதாக ஸ்கேன்  பொருத்தப்பட்டு செயல்பட ஆரம்பித்திருக்கிறது ....அதைச் சார்ந்த நிகழ்வுகளே இவை ....(ITS NOTHING TO MADE FUN OF ILLITERACY ..OR POVERTY..)
இருபத்தொராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு  கடைக்கோடி வரை சென்று சேர வில்லை என்கிற நிதர்சனம்
நேற்று ஓட்டுப்  போட்ட கதையைச் சொன்ன சுவாரசியத்தில் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன் ...ஓட்டுப் போடக் கிளம்புகையில் , தயங்கியபடியே பக்கத்து வீட்டுப் பெண்மணி வந்தார் .." ஏம்பா , நம்ம தாலுக்கா ஆஸ்பத்திரியில புதுசா ஒரு மிஷினு ஏதோ வந்துருக்காம்ல , அதுல படுக்க வச்சு உள்ளார போயி வெளிய வந்தா , பார்ட்டு பார்ட்டா ( இங்க்லீஷ் !!!)படம் புடுக்கிமாமே, பக்கத்து ஊர்ல
யாருக்கோ ஒத்தத் தலைவலி இருந்துச்சாம் , அதுல ஏறிப் படுத்த பொறவு சரியாகிருச்சாம் ..( என்ன சொல்ல வருகிறார் ... ஒரு வேலை காந்தப் படுக்கை மாதிரி எதாவதா ? )..இன்னொருத்தருக்கோ சக்கர வியாதி சுத்தமா குணமாகிருச்சாம்.. ( நிலைமை விபரீதமாவதை உணரத் துவங்கினேன் ,).. 500 ரூபா வாங்குராகலாம் ..முக்கியமானவுக கையெழுத்துப் போட்ட இனமாவும் எடுப்பாங்களாம்" ( ஒரு வேலை கையெழுத்து எதுவும் கேட்கிறாரா?) .."அம்மா உங்களுக்கு என்ன வேணும்னே புரியலையே ", "அதில்லைப்பா, எனக்கு கூட கட்டி பார்த்து ( கட்டி பா..ர்..த்...து ..ஓ B.P யா !!)  பிரசர் இருக்கினு சொன்னியேப்பா !, நான் ஒரு தடவை அந்த மிஷினுக்குள்ள போய் வரவாப்பா?" ( ஏம்மா , அது என்ன துணிக்கடையா!!!!எல்லாரும்  போய் வர .) எப்படி ஆரம்பிப்பது ..."சரி , உங்களுக்கு பிரஷர் தவிர வேற  ஏதும் தொந்தரவு இருக்கா?" .." என்ன தம்பி இப்படிக்  கேட்குறிங்க , ராத்தரியில  எல்லாம் கை, கால் கொடைச்சல் , உடம்பெல்லாம் ஒரே வலி .." பகல்ல "- இது நான் .."  கருக்கல்ல எந்திருச்சி வேலைக்குப் போனா திரும்ப  வர ராத்திரியாய்டும்",  ( அப்புறம் கை,கால் கொடையாம என்ன செய்யும்) .."சரி சுகர்.. ம்.. இல்ல சக்கர" .."அதான் நம்ம  ஊரு டாக்டர் ( Might be one of the leading QUAKE )மருந்து கொடுத்து சக்கர ..பூரணமா  பூடுச்சே"  ( என்னமா சொல்றிங்க ,  complete cure !!!!).. "அதை விடுங்க தம்பி , அந்த மிசினுக்குள்ள போகவா வேண்டாமா ?" ,(விட மாட்டிங்க போல) கரும்பு மிஷினுக்குள் மாட்டியது போல விழித்த நான் , "அதில்லை அம்மா ," என ஆரம்பித்து ,CT SCAN
எப்போலாம் செய்யனும் , என்னென்ன கண்டுபிடிக்கலாம் , RADIATION பத்தியெல்லாம்
( இன்னமும் எனக்கு SURE-ஆத் தெரியலை, CT SCAN ???!! )...விலாரியாகப் பேசியதை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டே வந்தவர் ,.அப்படினா வேணாம்னு  சொல்றியா ? என ஏமாற்றமாக கேட்டுச் சென்றவர் ,,,வீட்டை விட்டு வெளியில் சென்றதும் , பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார் .."நம்ம தாலுக்கா ஆஸ்பத்திரியில புதுசா ஒரு மிஷினு ஏதோ வந்துருக்காம்ல , அதுல படுக்க வச்சு உள்ளார போயி  வெளிய வந்தா , பார்ட்டு பார்ட்டா படம் புடுக்கிமாமே...வா ஒரு எட்டு போயி,  என்னனு பார்த்துட்டு வந்துடுவோம்...சிறுவாட்டுக் காசு ஐநூறு ரூவா இருக்கும் ..அப்பிடியே ஒரு ரூவா குடுத்து சீட்டு வாங்கினா (!) குளுகோசும் ஏத்துவாங்கலாம்!!! ( ஒரு வழியாக ஆள் தேற்றியாகிவிட்டது ), நம்ம தம்பி கிட்ட கேட்டேன் ஏதேதோ சொல்லுது , அது இன்னம் படிச்சிகிட்டு தானே இருக்கு , விவரம் போதாதில்லை "( யாருக்கு எனக்கா ? அது சரி !!!)


விஷயம் இதுதான் : எங்கள் ஊருக்குப் பக்கத்தில் வட்ட மருத்துவமனையில் புதிதாக CT- ஸ்கேன்  பொருத்தப்பட்டு செயல்பட ஆரம்பித்திருக்கிறது ....அதைச் சார்ந்த நிகழ்வுகளே இவை .... (ITS NOTHING TO MADE FUN OF ILLITERACY ..OR POVERTY..THE VIEW BY A DOCTOR)

இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு  கடைக்கோடி வரை சென்று சேர வில்லை என்கிற நிதர்சனம்

உள்ளாட்சி தேர்தல் ...கொத்து பரோட்டா ...!!!!

இன்று உள்ளாட்சித் தேர்தல் ஆகையால்  வாக்களித்து வருவோம் என சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன் .....காலை முதலே கிராமம் பரபரப்பாய் இருந்தது ...வீட்டிலேயே முதல் கான்வாஸ் ஆரம்பித்தது    ...."அந்த......கட்சிக்காரர்  வீட்டிற்கே வந்து அப்பாவுக்குத் துண்டு போர்த்தியிருக்கிறார், அவருக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும்" -இது அம்மா ( போடலேன்னா அவர் தலையில் துண்டு விழும் !!!..போட்டா நம்ம தலையில!!!! ....எப்படியும் துண்டு உறுதி )..."டேய்  நீ என்ன பண்ணுவியோ தெரியாது ..பல்புக்கு மட்டும் போட்ரு..நமக்கு ஒண்ணுன்னா, அவருதான் வருவாரு".- இது நண்பன் .( ஆமா , ஊர்ல யாருக்காவது ஒண்ணுன்னா , ஆம்புலன்சே வரக்கூட சரியான ரோடு கிடையாது...).."நம்ம மாமா கூட பிரச்சினை பண்ணவரு நிக்கிறாராம்பா...அவருக்கு மட்டும் போட்றாத!" - இது அத்தை  ..(நம்ம மாமா யாரு கூட தான் பிரச்சினை பண்ணலை ..அது சரி என்ன சின்னம்-னு சொல்லலையே...சரி தலையாட்டி வைப்போம்). வாக்குச் சாவடி நெருங்க,நெருங்கத்தான் ஒரு விபரீதம் புரிந்தது ..எனது பங்காளியும்,உறவுமுறைக்காரரும் எதிர்த்து நிற்பது ..இரண்டு குடும்பமும் வரிசை கட்டி நின்றிருந்தது...போர் மேகங்கள் சூழ்ந்து, மழை வரும் போலிருந்ததால், இருவருக்கும்  மையமாக தலையாட்டி விட்டு இடத்தை காலி செய்தேன். (சத்தியமாக இந்த வழியில் திரும்பி வரக்கூடாது )என யோசித்த வேளையில் ..தள்ளாடியபடியே ஒருவர் வந்து..."தம்பி போட் ரே ய் ய் ய் ..."( half boil போட்டு,ஆள்  flat. full போதை. உங்க சின்னம் என்னன்னே சொல்லலை ணே.!..)..திரும்பி நடக்கத் துவங்கினால், சிவப்புக் கம்பள வரவேற்பு போல, இரு மருங்கிலும் பாதை அடைத்து நின்றிருந்தார்கள் ( அடப் பாவிகளா! ..நம் ஊரின் மொத்த மக்கள் தொகையே இவ்வளவுதானே! ..எல்லாருமா தேர்தலில் நிற்கிறீர்கள்?? )..ஒட்டு மொத்த கிராமே தள்ளாட்டத்தில் இருப்பதாகவும் , ஒவ்வொருவரும் பின்னால் உருட்டுக் கட்டை மறைத்து வைத்திருப்பதாகவும் ஒரு கணம் தோன்றியது ....ஒரு மீசைக்காரர் ...."தம்பி தெரியும்ல...போட்ருங்க" என்றார்... ( ஐயா, உங்க சின்னம் மட்டுமில்ல , உங்க பேரு கூட தெரியலியே....)..அடுத்து ஒரு பாட்டி .."யாரு டாக்டர் தம்பியா ..இந்த தம்பிதான் என் உசிரை காப்பாத்துச்சி"...(இரண்டு முறை ஊசி போட்டதாக ஞாபகம்!!! ஏம்  பாட்டி இந்த இடத்துல இது ரொம்ப முக்கியமா? .. ...) "அப்ப, தம்பி  பேனாவுக்கு  போட்ரும்"... ( இது என்ன டீலிங் ..ஓ!!!  ரெகுலர் பேஷண்ட் -டாமா !!)  ..........

அடுத்து நடந்தவை  அச்சில் ஏற்ற முடியாத வன்முறைகள் ...எச்சரிக்கும் தொனியில்
விரல் காட்டி விட்டுச் சென்றார் ஒருவர்..கடைசியில் அவர் 1 என சின்னம் இருக்கும் நம்பர் காட்டிச் சென்றிருக்கிறார் எனப் புரிந்தது ...ஒரு கட்டம் போட்ட சட்டைக்காரர் .."தம்பி எனக்கு மட்டும் போடலேன்னா நீங்க என் வீட்டுப் பக்கமே வரக்கூடாது" என உரிமையாக சொல்லிச் சென்றார் ( உங்க வீடா!! நான் என் வீட்டுக்கே, வருஷத்துல  நாலஞ்சு தடவைதான் வர்றேன் ..)..

ஒரு வழியாக வாக்குச் சாவடி அடைகிறேன் ..அங்கே பள்ளி நண்பனொருவன் ..சில சின்னங்களைச் சொல்லி, அதற்குத்தான் போட வேண்டும் எனச் சொன்னான் ( டேய்,நான் ஏற்கனவே குழம்பிப் போய் இருக்கேன் ,இதுல நீ வேரையா...)..அங்கே நடந்த தள்ளு முள்ளு மற்றும் குழப்பத்தில் ..கையெழுத்து போடுவியா என்றெல்லாம் கேட்காமல் ( ஆமா இந்த கிராமத்துல கையெழுத்து போடத் தெரிஞ்சவன் எவன்டா இருக்கப் போறீங்க ,என அந்த அதிகாரி ஐயா (!!!) நினைத்திருக்கலாம் )..என் விரல்களை மட்டுமில்லால் கையையும் சேர்த்து ரப்பர் ஸ்டாம்ப் இன்க் ஆக்கி ...ரேகை பதித்து, (இந்த களேபரத்தில் வேறொருவர்  என் கையை உபயோகித்து ரேகை பதித்திருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது ) , கையில் வித விதமான கலர்களில் நாலு பேப்பர் கொடுத்து. பத்தாததற்கு மை ஒழுகும் ஒரு குழாயையும் ( சின்னம் குத்த ) கொடுத்து , அட்டைப் பெட்டியின் பின்னே  தள்ளினார்கள் ...

அதைப் பிரித்துப் பார்த்ததும் .அதிர்ச்சி அடைந்தேன் ...உறுப்பினரின் சின்னம் மட்டும் இருந்தது. பெயர் காணோம் ..சில நொடிகள் அம்மா , அத்தை , நண்பர்கள் , பக்கத்து வீட்டுக் காரர், அந்த பாட்டி, மீசைக்காரர் , உருட்டுக் கட்டை எல்லாம் சுருள்வலம் ( flash back -ல கொசுவத்திச் சுருள் வரும்ல ) வந்தன..out of syllabus-ல் question paper வந்த பையன் போல் திரு திரு- வென விழித்த என்னைப் பார்த்து , "தம்பி சீக்கிரம் போடுங்க" என அதிகாரி குரல் கொடுத்தார் ..சட சட வென குத்தித்தள்ளி, பெட்டியில் போட்டு விட்டு , முறைத்துக் கொண்டிருந்த பூத் ஏஜெண்ட்கள் பக்கம் திரும்பாமல் ,வெளியில் வந்து , நண்பனுக்கு போன் செய்தேன் .."வண்டியை ஸ்டார்ட் செய்து தயாராய்  வை "என க்  கூறிவிட்டு , வெளியேறுகையில்   எதிர்பட்ட சிலர் "தம்பி எதுக்குப் போட்டிங்க?" ..எல்லாருக்கும் மையமாய் நம்ம (!!!???) சின்னத்துக்கு தாங்க ...(சத்தியமா ஒன்  சின்னம் தென்ன மரத்துக்குத் தாண்ணே
போட்டேன்!! )  எனக் கூறிய என்னை நம்பாமல் பார்த்ததை, நல்ல வேளை நான் பார்க்கவில்லை ..டூ வீலரில் தாவி ஏறி, அறுபதில் வேகமெடுத்து , டவுனுக்கு வந்து , பேருந்தில் அமர்ந்து நிம்மதிப் பெருமூச்சு  விட்டேன்...... உள்ளாட்சி  ஜனநாயகம்  வாழ்க!!!! ......போட்டாச்சி போட்டாச்சி ஓட்டு போட்டாச்சி!!!! !!!!!!

Monday, October 17, 2011

தேவ சாட்சி !!!

எங்குமாய் ...எல்லாமாய்
என்னுளும் முற்றிலுமாய் ..
நீயே இயக்குகிறாய் ...இயங்குகிறாய் ...
பெரு வெடிப்பின் முதல் கணம்,
பிரளயத்தின் மௌன முகம் ...
எல்லாம் உனது அசைவுகளில் ..
புரிதலும் , தேடுதலும் தாண்டிய
மோன  வெளிகள் உன் சஞ்சாரம் ...
அகண்ட பேரண்டம் ..பஞ்ச பூதங்கள்
இயற்கையின் எழில் யாவும் நீயே ...
உயிரியலின்  தாயே!! ....
இன்ப  ,துன்பங்கள்  
வெற்றி,தோல்விகள்
எல்லாம் உனது ஓவியத்தின் கோடுகள் ...எனில் .

வரைந்து முடித்த நீயே  ..
தூரிகையைத் தூக்கி எறிந்ததேனோ?
உயிரின் ரகசியம் ஒளித்து வைத்ததேனோ??

அனிச்சம்பூக்கள்: சொற்பொருள் ...

அனிச்சம்பூக்கள்: சொற்பொருள் ...: நீ கடந்து செல்கிற தருணங்கள் .... உனக்கு ஒரு சில கணங்கள் .. எனக்கோ யுகங்கள் தாண்டிய தவம் ... உன் பார்வை படும் தொலைவுகள், உனக்கு ...

Sunday, October 16, 2011

சொற்பொருள் ...


நீ கடந்து செல்கிற தருணங்கள்  ....
உனக்கு  ஒரு சில  கணங்கள் ..
எனக்கோ யுகங்கள் தாண்டிய தவம் ...
உன் பார்வை  படும் தொலைவுகள்,
உனக்கு  முகங்கள் தேடும் எத்தனிப்பு.
எனக்கோ சொர்க்க வாசலின் நுழைவுச் சீட்டு,
நீ பேசிச் செல்கிற  வார்த்தைகள்,
உனக்கு சிறு குழந்தை கலைத்துப் போடுகிற  பொம்மைகள் .
எனக்கோ நுரையீரல் நிறைத்திடும் மூச்சுக்காற்று ...
உன் இதழ்களில் தவழவிடும் புன்னகை ..
உனக்கோ வழக்கமாய் உதிக்கிற சூரியன்
எனக்கோ நூற்றாண்டுகளில் நிகழும் 'சூப்பர் நோவா'....
உனது கண்கள் நீர் சொரிந்த நிகழ்வு
நான் கண்டு அறியாத எனது உயிரின் ரகசியம்
 உனது மூச்சுக் காற்று என்னில் விழும் நிகழ்தகவு
செவ்வாய் கிரகத்தில் தண்ணீரின்   இருப்பு.......!!!




Thursday, October 13, 2011

அனிச்சம்பூக்கள்: முகமூடிகள்!!!!

அனிச்சம்பூக்கள்: முகமூடிகள்!!!!: எல்லோரிடமும் இருக்கிறது.. முகங்கள் மறைக்குமொரு முகமூடி மாறும் கணங்களின் எண்ணிக்கையில், பல வண்ணங்களில்...... துரிதமாய் மாற்றுவதிலும், ...

அனிச்சம்பூக்கள்: கல்லறைப் பூக்கள்

அனிச்சம்பூக்கள்: கல்லறைப் பூக்கள்: உன்னிடம் கேட்கிறேன் ஒரு புன்னகை, கொஞ்சம் நட்பு, ஏராளமாய் அன்பு, எப்போதும் உடனிருப்பு, இறந்து போகையில் இரு துளி கண்ணீர் நீ தருகிறாய்...

தேவதைக் காலங்கள்

நான் செய்த உதவிகளுக்காய் ,
என்ன வேண்டும் எனக் கேட்கிற  உன்னிடம்,
" இப்போதைக்கு ஒரு புன்னகை ,
   எப்போதும்  உன்  அன்பு ,
   இறந்து போகையில் இரு துளி கண்ணீர்"
  என்கிறேன் நான் .....
  கேட்டவுடன்  ஓடி விடுகிறாய் எப்போதும் போல்
உன் புன்னகையை  மறைத்து .....
தூரத்தில் நின்று
"நீ பேராசைப்படுகிறாய்   " வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கையில் ....
கேட்காமல் கிடைத்தது பொக்கிஷம் எனக்கு !!!...

முகமூடிகள்!!!!


எல்லோரிடமும் இருக்கிறது..
முகங்கள் மறைக்குமொரு முகமூடி
மாறும் கணங்களின் எண்ணிக்கையில்,
பல வண்ணங்களில்......
துரிதமாய் மாற்றுவதிலும்,
தூக்கி எறிவதிலுமே சாமர்த்தியமுள்ளது !!
முகமூடியை  மாற்ற மறந்தவர்கள்
பரிதாபத்திற்குரியவர்கள்!!!

முகமூடியே மறந்து போனவர்கள்
 துரதிர்ஷ்டசாலிகள் !!
பணத்திற்காய், பதவிக்காய், உதவிக்காய்,
பெண்ணிற்காய், மண்ணிற்காய்
மாறும் முகமூடிகள்!.... மாறும் எண்ணங்களின் வேகத்தில்....
கிழித்தெறிகின்ற   போதிலும் ,
லாவகமாய் இன்னொன்று அணிகிறவர்கள், 
அசகாய சூரர்கள் !!!
நடுநிசிகளில், முகமூடி களைந்து
கண்ணாடியில் முகம் பார்க்கிறார்கள்
தூக்கம் வராத, மனசாட்சி உள்ளவர்கள் !!!!
கல்லறைக் குழியிலும்
முகமூடி கழற்ற மறுக்கிறார்கள்
சில தேர்ந்த நடிகர்கள் !!!
முகமூடி அணிவது சோசியலிசம் ஆன பின்பு 
எண்ணிக்கைகளில் தான் வேறுபாடு !!!...
விற்கும் கடைகளில்,
வழக்கம் போல்
விழாக்காலத் தள்ளுபடி !!!!!......  

 

Monday, October 10, 2011

கல்லறைப் பூக்கள்

உன்னிடம் கேட்கிறேன்
ஒரு புன்னகை,
கொஞ்சம் நட்பு,
ஏராளமாய் அன்பு,
எப்போதும் உடனிருப்பு,
இறந்து போகையில் இரு துளி கண்ணீர்
நீ தருகிறாய் !!!!!
ஒரு பார்வை,
கொஞ்சம் வார்த்தைகள்,
ஏராளமாய் பரிதவிப்பு,
எப்போதும் கண்ணீர்,
உறங்கிய கல்லறையில்
உலராத பூக்கள் !!!!!

Monday, September 26, 2011

சாட்சிகள்

விரைந்து செல்லும் பேருந்துகளின்
முன்னிருக்கைகளில் மூன்றை
சில   கணங்களில்  
அலசிப் பார்த்துவிடுகிறது 
ஆதாமின் வாரிசு!!!

Sunday, September 25, 2011

நீளும் விரல்கள்

பிறருக்குத்  தருகையில்  
சற்றே கிழிந்த ,பழைய நோட்டுகள்
தேடித் தர எத்தனிக்கும் மனம்  ...
பிரளயத்தின்  நீளும் விரல்களின் சாட்சியாய் !!! .....

 

Friday, September 23, 2011

பதிவுகள் ....



மொழிகள் அறியா வயதில்
கவிதைகளை அறிமுகம் செய்வித்தவள் நீ!!!
மூங்கில் வெளிகளில் புல்லாங்குழல் தேடித் திரிகையில்
இசையை  அறிமுகம் செய்வித்தவள் நீ!!! 
 
பூக்களை அறிந்திராத எனக்கு
புன்னகையின்   அர்த்தம்  கற்பித்தவள நீ !!!
உடல்  தாண்டா பெண்மை அறிந்திராத எனக்கு
கண்கள் தாண்டாக் காதலை 
கற்றுக்கொடுத்தவள் நீ !!!!!

வாழ்வெனும் முப்பரிமாண பிம்பங்களை
உணர்வித்தவள் நீ!!!
வெற்றுக் கிறுக்கல்களை
கவிதை, காவியமாக்கியவள்   நீ !!!

இறுதியாய்
நிராகரிப்பெனும்
வாழ்வின் தீராத வலிகள்
உணர வைத்ததும் நீயே!!!!

Thursday, September 22, 2011

அதிவேக பயணங்களில் ..

எண்பது,  நூறுகளில் விரையும்
இருசக்கர வாகனங்களின்

பின்னிருக்கைகளை  இயக்கிடும் 
ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டீரோன்கள்


தேவதை உலகில் .

இடுப்பினில்  கைவைத்து அழகாய் முறைக்கிறாள் ......அவள்
தூக்கி எறிந்த மை தீர்ந்த எழுதுகோலை,
தேடித்தரவில்லை என்பதாய் குற்றச்சாட்டு.
தோப்புக்கரணங்கள், பாசாங்கு வார்த்தைகள்
எல்லாம் தோற்றுப் போகின்றன ...
இருபது டெசிபலில் துவங்கும் அழுகை
நூற்றி இருபதைத்  தாண்டி செல்கிறது ....
கை கால்களின் தாள லயத்துடன் ....
எடுத்து வரும் ஏனையவை  நிராகரிக்கப்படுகிறது
டோரா பூச்சி, பவர் ரேன்ஞர்  , சூப்பர் மேன்
எதற்கும் மசியவில்லை அவள்..
என்ன செய்வதென விழி பிதுங்கும் வேளையில் ..
பதறி எழுந்து  ' ஹோம் வொர்க் ' செய்யனும்
என குதித்தோடுகிறாள் குட்டி தேவதை .......

உள்ள நிவாரணம்!!


ஆழிப்பேரலையின் வேகத்தில்,
கடந்து சென்றிடும் உனது பார்வைகளில்,
முற்றிலும் சிதைந்து போகின்றன,
பலகீனமான என் இதய குடியிருப்புகள்  
 

ஆட்கொணர்வு

எனது விழித்திரையில் உனது  பிம்பங்கள்
நுழைந்திடும்  தொலைவுகள்
எனக்குள் அடைமழை !!!
உன்னுடன் பிறர்  பேசிடும் இடைவெளிக
ள் நிறைத்திடும்  தகிக்கிறதோர் அமிலமழை!!!!!

Tuesday, September 20, 2011

கொலைக்களம்

                     
அவளின் தேகம்பட்டுத்  திரும்பிடும் தென்றல் காற்று 
அனிச்சை மண்டலத்தில் நிகழ்த்திச் சென்றிடும் ,,, 
மௌனமாய் ஒரு பெருவெடிப்பை !!!!!

Monday, September 12, 2011

சொல்லோவியம்


'தேவதைகளின் தேவதை '
அவள் இல்லை எனினும் 
தேவைப்படுகிறது ஓர் வார்த்தை ,
அதைவிட அழகாய் !!!!!!

மந்திரப் புன்னகை ...


அணைக்கட்டு நீரென 
தேக்கி வைத்த என் காதல் 
பீறிட்டுக் கிளம்புகிறது 
உன் புன்னகை   தாழ்  திறக்கையில் !!