இன்று உள்ளாட்சித் தேர்தல் ஆகையால் வாக்களித்து வருவோம் என சொந்த
ஊருக்குச் சென்றிருந்தேன் .....காலை முதலே கிராமம் பரபரப்பாய் இருந்தது
...வீட்டிலேயே முதல் கான்வாஸ் ஆரம்பித்தது ...."அந்த......கட்சிக்காரர்
வீட்டிற்கே வந்து அப்பாவுக்குத் துண்டு போர்த்தியிருக்கிறார்,
அவருக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும்" -இது அம்மா ( போடலேன்னா அவர் தலையில்
துண்டு விழும் !!!..போட்டா நம்ம தலையில!!!! ....எப்படியும் துண்டு உறுதி
)..."டேய் நீ என்ன பண்ணுவியோ தெரியாது ..பல்புக்கு மட்டும்
போட்ரு..நமக்கு ஒண்ணுன்னா, அவருதான் வருவாரு".- இது நண்பன் .( ஆமா , ஊர்ல
யாருக்காவது ஒண்ணுன்னா , ஆம்புலன்சே வரக்கூட சரியான ரோடு
கிடையாது...).."நம்ம மாமா கூட பிரச்சினை பண்ணவரு
நிக்கிறாராம்பா...அவருக்கு மட்டும் போட்றாத!" - இது அத்தை ..(நம்ம மாமா
யாரு கூட தான் பிரச்சினை பண்ணலை ..அது சரி என்ன சின்னம்-னு
சொல்லலையே...சரி தலையாட்டி வைப்போம்). வாக்குச் சாவடி
நெருங்க,நெருங்கத்தான் ஒரு விபரீதம் புரிந்தது ..எனது
பங்காளியும்,உறவுமுறைக்காரரும் எதிர்த்து நிற்பது ..இரண்டு குடும்பமும்
வரிசை கட்டி நின்றிருந்தது...போர் மேகங்கள் சூழ்ந்து, மழை வரும்
போலிருந்ததால், இருவருக்கும் மையமாக தலையாட்டி விட்டு இடத்தை காலி
செய்தேன். (சத்தியமாக இந்த வழியில் திரும்பி வரக்கூடாது )என யோசித்த
வேளையில் ..தள்ளாடியபடியே ஒருவர் வந்து..."தம்பி போட் ரே ய் ய் ய் ..."(
half boil போட்டு,ஆள் flat. full போதை. உங்க சின்னம் என்னன்னே சொல்லலை
ணே.!..)..திரும்பி நடக்கத் துவங்கினால், சிவப்புக் கம்பள வரவேற்பு போல,
இரு மருங்கிலும் பாதை அடைத்து நின்றிருந்தார்கள் ( அடப் பாவிகளா! ..நம்
ஊரின் மொத்த மக்கள் தொகையே இவ்வளவுதானே! ..எல்லாருமா தேர்தலில்
நிற்கிறீர்கள்?? )..ஒட்டு மொத்த கிராமே தள்ளாட்டத்தில் இருப்பதாகவும் ,
ஒவ்வொருவரும் பின்னால் உருட்டுக் கட்டை மறைத்து வைத்திருப்பதாகவும் ஒரு
கணம் தோன்றியது ....ஒரு மீசைக்காரர் ...."தம்பி தெரியும்ல...போட்ருங்க"
என்றார்... ( ஐயா, உங்க சின்னம் மட்டுமில்ல , உங்க பேரு கூட
தெரியலியே....)..அடுத்து ஒரு பாட்டி .."யாரு டாக்டர் தம்பியா ..இந்த
தம்பிதான் என் உசிரை காப்பாத்துச்சி"...(இரண்டு முறை ஊசி போட்டதாக
ஞாபகம்!!! ஏம் பாட்டி இந்த இடத்துல இது ரொம்ப முக்கியமா? .. ...) "அப்ப,
தம்பி பேனாவுக்கு போட்ரும்"... ( இது என்ன டீலிங் ..ஓ!!! ரெகுலர்
பேஷண்ட் -டாமா !!) ..........
அடுத்து நடந்தவை அச்சில் ஏற்ற முடியாத வன்முறைகள் ...எச்சரிக்கும் தொனியில்
விரல் காட்டி விட்டுச் சென்றார் ஒருவர்..கடைசியில் அவர் 1 என சின்னம் இருக்கும் நம்பர் காட்டிச் சென்றிருக்கிறார் எனப் புரிந்தது ...ஒரு கட்டம் போட்ட சட்டைக்காரர் .."தம்பி எனக்கு மட்டும் போடலேன்னா நீங்க என் வீட்டுப் பக்கமே வரக்கூடாது" என உரிமையாக சொல்லிச் சென்றார் ( உங்க வீடா!! நான் என் வீட்டுக்கே, வருஷத்துல நாலஞ்சு தடவைதான் வர்றேன் ..)..
ஒரு வழியாக வாக்குச் சாவடி அடைகிறேன் ..அங்கே பள்ளி நண்பனொருவன் ..சில சின்னங்களைச் சொல்லி, அதற்குத்தான் போட வேண்டும் எனச் சொன்னான் ( டேய்,நான் ஏற்கனவே குழம்பிப் போய் இருக்கேன் ,இதுல நீ வேரையா...)..அங்கே நடந்த தள்ளு முள்ளு மற்றும் குழப்பத்தில் ..கையெழுத்து போடுவியா என்றெல்லாம் கேட்காமல் ( ஆமா இந்த கிராமத்துல கையெழுத்து போடத் தெரிஞ்சவன் எவன்டா இருக்கப் போறீங்க ,என அந்த அதிகாரி ஐயா (!!!) நினைத்திருக்கலாம் )..என் விரல்களை மட்டுமில்லால் கையையும் சேர்த்து ரப்பர் ஸ்டாம்ப் இன்க் ஆக்கி ...ரேகை பதித்து, (இந்த களேபரத்தில் வேறொருவர் என் கையை உபயோகித்து ரேகை பதித்திருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது ) , கையில் வித விதமான கலர்களில் நாலு பேப்பர் கொடுத்து. பத்தாததற்கு மை ஒழுகும் ஒரு குழாயையும் ( சின்னம் குத்த ) கொடுத்து , அட்டைப் பெட்டியின் பின்னே தள்ளினார்கள் ...
அதைப் பிரித்துப் பார்த்ததும் .அதிர்ச்சி அடைந்தேன் ...உறுப்பினரின் சின்னம் மட்டும் இருந்தது. பெயர் காணோம் ..சில நொடிகள் அம்மா , அத்தை , நண்பர்கள் , பக்கத்து வீட்டுக் காரர், அந்த பாட்டி, மீசைக்காரர் , உருட்டுக் கட்டை எல்லாம் சுருள்வலம் ( flash back -ல கொசுவத்திச் சுருள் வரும்ல ) வந்தன..out of syllabus-ல் question paper வந்த பையன் போல் திரு திரு- வென விழித்த என்னைப் பார்த்து , "தம்பி சீக்கிரம் போடுங்க" என அதிகாரி குரல் கொடுத்தார் ..சட சட வென குத்தித்தள்ளி, பெட்டியில் போட்டு விட்டு , முறைத்துக் கொண்டிருந்த பூத் ஏஜெண்ட்கள் பக்கம் திரும்பாமல் ,வெளியில் வந்து , நண்பனுக்கு போன் செய்தேன் .."வண்டியை ஸ்டார்ட் செய்து தயாராய் வை "என க் கூறிவிட்டு , வெளியேறுகையில் எதிர்பட்ட சிலர் "தம்பி எதுக்குப் போட்டிங்க?" ..எல்லாருக்கும் மையமாய் நம்ம (!!!???) சின்னத்துக்கு தாங்க ...(சத்தியமா ஒன் சின்னம் தென்ன மரத்துக்குத் தாண்ணே
போட்டேன்!! ) எனக் கூறிய என்னை நம்பாமல் பார்த்ததை, நல்ல வேளை நான் பார்க்கவில்லை ..டூ வீலரில் தாவி ஏறி, அறுபதில் வேகமெடுத்து , டவுனுக்கு வந்து , பேருந்தில் அமர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்...... உள்ளாட்சி ஜனநாயகம் வாழ்க!!!! ......போட்டாச்சி போட்டாச்சி ஓட்டு போட்டாச்சி!!!! !!!!!!

No comments:
Post a Comment