Monday, October 14, 2013

'சுழலும்' வாழ்வு!


கண்கள் கசக்கி
சோம்பல் முறித்தால்
காதில் ஒலிக்கிறது
வீடு மனை விற்கும்
சின்னத்திரை நாயகியின் குரல்!

அடித்து ஓய்ந்த அலாரத்தை
 தலையில் தட்டி குளியலறை உள் நுழைகிறேன்
அலுவலகம் அடைகையில்
ஐந்து நிமிடம் லேட்!

விஷமப் புன்னகையுடன் மேலதிகாரி
அப்புறம் வந்து பாரு என்கிறார்
உறுதியாய் ஒரு சில்லறை வேலை
இன்று மார்க்கெட்டோ, ஸ்கூலோ

பிறகுதான் உறைத்தது
ப்ரேக் பாஸ்ட்சாப்பிடாதது
 கேண்டீனில் வடை, சமோசா
இரைப்பை கதறத் திணித்து
ஜலசமாதி செய்கிறேன்

லஞ்சில் பிரியாணியும் , சிக்கனும் உள்நுழைத்து'
இம்முறை கோக கோலா!
பரபரப்பாய் அலுவலக வேலையில்
இடையில் மூன்று , நான்கு தேநீர்
உள் சென்றிருக்கலாம்
நினைவிலில்லை சரியாய்!

மாலையில் சகாக்களுடன்
அரட்டை வித் சீஸ் பர்கர்!

மாலை திரும்பவும் அதே புகை, வாகனங்கள்

இரவில் அம்மா தந்த இட்லியை
வேணாமென மறுத்து,
பாலைப் பருகி
முகநூலை நள்ளிரவு வரை மேய்ந்து
அலாரம் வைத்து
படுக்கையில் விழுகிறேன்!

வயிற்றிலும்,
மனதிலும்
அமில உணர்வு!




Sunday, October 13, 2013

நிதர்சனம்



அவள் திருமணத்திற்கு 
வாழ்த்த வருகிற ,
ஆயிரம் பேர்களில் - நான்
 பெயர் தெரிந்ததொரு முகம் 
முகம் தெரிந்ததொரு பெயர்.......

துரத்தும் நிஜம்

நிழலெனத் தொடரும்  நிஜங்கள் 
திசை திருப்பிட
எத்தனிக்கிறேன்
காரணங்கலெனும்   இரைகளிட்டு...

எறிகின்ற இரைகளில்
பலம் பெற்று
துரத்துகிறது
இன்னும் அதிவேகமாய!


Tuesday, October 8, 2013

சில நேரங்களில் சில பெயர்கள்!

நினைவில்
நிழலாடும்
பல முகங்கள் !
பெயர்கள் அறியாமல்!

பேசிப் பிரிந்தபின்
நினைவில் வரும் சில பெயர்கள்!

அருகிருப்பவர் விளித்திடுகையில்
அறியப்படும் சில பெயர்கள்!

முழுப் பெயர் என்ன?
என்பதாயும்,
பக்கத்தில் இருப்பவரிடம்
கேட்பதுமாய் தெரியும் சில பெயர்கள்!

விக்கல்களின்
இடையில் சிக்கிடும் சில பெயர்கள்!

வாரங்கள் பல ஆகலாம்
வரவே மறுத்திடலாம்
சில பெயர்கள்

ஞாபகத்திற்கு வராத
பெயர்கள் எல்லாம்
'நல்ல பெயர்கள்'தான்