Monday, September 26, 2011

சாட்சிகள்

விரைந்து செல்லும் பேருந்துகளின்
முன்னிருக்கைகளில் மூன்றை
சில   கணங்களில்  
அலசிப் பார்த்துவிடுகிறது 
ஆதாமின் வாரிசு!!!

Sunday, September 25, 2011

நீளும் விரல்கள்

பிறருக்குத்  தருகையில்  
சற்றே கிழிந்த ,பழைய நோட்டுகள்
தேடித் தர எத்தனிக்கும் மனம்  ...
பிரளயத்தின்  நீளும் விரல்களின் சாட்சியாய் !!! .....

 

Friday, September 23, 2011

பதிவுகள் ....



மொழிகள் அறியா வயதில்
கவிதைகளை அறிமுகம் செய்வித்தவள் நீ!!!
மூங்கில் வெளிகளில் புல்லாங்குழல் தேடித் திரிகையில்
இசையை  அறிமுகம் செய்வித்தவள் நீ!!! 
 
பூக்களை அறிந்திராத எனக்கு
புன்னகையின்   அர்த்தம்  கற்பித்தவள நீ !!!
உடல்  தாண்டா பெண்மை அறிந்திராத எனக்கு
கண்கள் தாண்டாக் காதலை 
கற்றுக்கொடுத்தவள் நீ !!!!!

வாழ்வெனும் முப்பரிமாண பிம்பங்களை
உணர்வித்தவள் நீ!!!
வெற்றுக் கிறுக்கல்களை
கவிதை, காவியமாக்கியவள்   நீ !!!

இறுதியாய்
நிராகரிப்பெனும்
வாழ்வின் தீராத வலிகள்
உணர வைத்ததும் நீயே!!!!

Thursday, September 22, 2011

அதிவேக பயணங்களில் ..

எண்பது,  நூறுகளில் விரையும்
இருசக்கர வாகனங்களின்

பின்னிருக்கைகளை  இயக்கிடும் 
ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டீரோன்கள்


தேவதை உலகில் .

இடுப்பினில்  கைவைத்து அழகாய் முறைக்கிறாள் ......அவள்
தூக்கி எறிந்த மை தீர்ந்த எழுதுகோலை,
தேடித்தரவில்லை என்பதாய் குற்றச்சாட்டு.
தோப்புக்கரணங்கள், பாசாங்கு வார்த்தைகள்
எல்லாம் தோற்றுப் போகின்றன ...
இருபது டெசிபலில் துவங்கும் அழுகை
நூற்றி இருபதைத்  தாண்டி செல்கிறது ....
கை கால்களின் தாள லயத்துடன் ....
எடுத்து வரும் ஏனையவை  நிராகரிக்கப்படுகிறது
டோரா பூச்சி, பவர் ரேன்ஞர்  , சூப்பர் மேன்
எதற்கும் மசியவில்லை அவள்..
என்ன செய்வதென விழி பிதுங்கும் வேளையில் ..
பதறி எழுந்து  ' ஹோம் வொர்க் ' செய்யனும்
என குதித்தோடுகிறாள் குட்டி தேவதை .......

உள்ள நிவாரணம்!!


ஆழிப்பேரலையின் வேகத்தில்,
கடந்து சென்றிடும் உனது பார்வைகளில்,
முற்றிலும் சிதைந்து போகின்றன,
பலகீனமான என் இதய குடியிருப்புகள்  
 

ஆட்கொணர்வு

எனது விழித்திரையில் உனது  பிம்பங்கள்
நுழைந்திடும்  தொலைவுகள்
எனக்குள் அடைமழை !!!
உன்னுடன் பிறர்  பேசிடும் இடைவெளிக
ள் நிறைத்திடும்  தகிக்கிறதோர் அமிலமழை!!!!!

Tuesday, September 20, 2011

கொலைக்களம்

                     
அவளின் தேகம்பட்டுத்  திரும்பிடும் தென்றல் காற்று 
அனிச்சை மண்டலத்தில் நிகழ்த்திச் சென்றிடும் ,,, 
மௌனமாய் ஒரு பெருவெடிப்பை !!!!!

Monday, September 12, 2011

சொல்லோவியம்


'தேவதைகளின் தேவதை '
அவள் இல்லை எனினும் 
தேவைப்படுகிறது ஓர் வார்த்தை ,
அதைவிட அழகாய் !!!!!!

மந்திரப் புன்னகை ...


அணைக்கட்டு நீரென 
தேக்கி வைத்த என் காதல் 
பீறிட்டுக் கிளம்புகிறது 
உன் புன்னகை   தாழ்  திறக்கையில் !!   

sms

உனது பெயர் தாங்கிடும்
குறுஞ்செய்திகளால் நிரம்பிடும் அலைபேசி
எனது நியுரான்களின் நீட்சி !!!

விடுகதை வாழ்வு ...

இதயத்தை நிறைத்திடும் உன் நினைவுகள்
கன்னங்களில் வழிந்தோடிடும் கண்ணீராய் ....
இயக்கங்கள் அனைத்தையும் அனிச்சையாய்

புன்னகை என்ன விலை என்றாக்கினாய் ...
வழியேதும் சொல்லாமல் விட்டுப் போகிறாய்
பூக்கள் உடனாகிய பயணமா....
பூக்களின் மீதான பயணமா...
நீ  வானிலெறிந்த நாணயத்தின்

பக்கமறிவதற்காய்  காத்திருக்கிறேன் .......

தூரிகை தொடாத வண்ணங்கள்

பட்டாம்பூச்சியின் வண்ணம்
கைகளில் ஒட்டிக்கொண்ட குழந்தை,
கன்னங்களில் இழைத்துக்கொள்கையில்
 ஒரு தேவதை உருவாகிறாள்    !!!

ஓர் இரவினில்........

புல்லினமும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவு வேளை
நடன மங்கையின் காற்சிலம்பு போல்,
விடாது ஒலிக்கும் முனகல் சப்தங்கள்
ஒட்டுமொத்த குத்தகையாய் casuality -ஐ எடுத்துவிட்ட கொசுக்கள் ,

காரிருள் சூழ்ந்த வானமாய்,
கண்களைச்    சொக்கிடும் தூக்கம்...
எப்போது  விடியும் - என ஏங்கித்தவிக்கும் விழிகள் ,
ஐந்து நிமிடத்திற்கொருமுறை   அரை நிர்வாணப்படும் ஓய்வு,
காலை சேர்த்த நோயாளியின் அருகாமைக்கு
அனுமதி கேட்கும் நச்சரிப்புகள் ,

குடிபோதை வண்டியோட்டிகளுடன் , பரிசோதனைக்காய்
முழு போதையுடன் மாநகர காவலர்கள்...
தற்கொலை முயற்சியாய் - கை செய்யும்
வெள்ளைத்தாள் தவறுகள்
‘என்ன செய்வது டாக்டர்?’ என
ஓயாமல் தொல்லை தரும் செவிலிகள்!!!!

மூன்றாவது படுக்கையிலிருந்த நோயாளியின்
இறப்புக்கான காரணம் கேட்கும் கேள்விக்கணைகள் !!!!
காரணம் தேடி புத்தகங்களைப்  புரட்டுகையில்,
படிக்க விடாமல் தடுத்தது  அம்மாவின் உடல் நிலை,  

"சற்றேனும் ஓய்வு கொடுங்கள்"  என அலறுகிறேன் நான்
'எழுந்திருடா ! exam -க்கு நேரமாச்சு ,  ' - என்கிறான்  நண்பன்  ….

                                                                    
(A dream of exam going final year mbbs student .....to become a house surgeon)

கற்பனைகளில் ..

நினைக்க மறப்பதும் , மறக்க நினைப்பதும்
தாண்டிய முப்பரிணாம வெளிகளில்
உலவிக்கொண்டிருக்கிறாய் நீ !
                                     - sclero

'weather' report

இமைக்க மறந்த விழிகளில் உள்நுழைந்து
இதயத்தில் இறங்கிடும் நீ !
சற்றே மாற்றிச்செல்கிறாய், எனது வானிலையை
மிதவெப்பநிலைக்கு!
துவங்கக்கூடும் இனி,இடி மின்னல்
தவிர்த்ததோர் அடைமழை !!!
                                     - sclero

நட்பு வளையங்கள்...

இணைந்தே இருந்தோம் ....
இன்பமோ துன்பங்களோ ,.
எனது வலிகளில் ,
நீ உதிர்த்த கண்ணீரில்

ஒளிர்கிறது நம் நட்பு!

நெருக்கடி நேரங்களில்

உனது இருப்பில், தவிப்பில்

உணர்கிறேன் நட்பின் உயர்வை!



இருக்கிறாய்!
விண்மீனின் ஒளியாய் !
இதயத்தின் துடிப்பாய் !
மெல்லிசையாய் !

யாதும் நீக்கமற நிறைந்ததாய்!
எனது  இரண்டாம் தாயாய்!



S m s

குறுஞ்செய்திகளால் நிரம்பிடும் என் அலைபேசி....
காலை மாலை இரவு வணக்கங்களுடன் துவங்கிடும் தினமும் !!!
என்னை முட்டளாக்கிடும் எத்தனிப்புடன் பல !
புதிர்களுக்கான விடை தேடச் சொல்வதாய் சில  !
உருக்கிடும் நட்பு குறுஞ்செய்திகளுக்கோ,
உருக வைக்கும் காதல்  குறுஞ்செய்திகளுக்கோ,
உறைய வைத்திடும் புள்ளி விவரங்களுக்கோ பஞ்சமேயில்லை .......
கழுத்தினில் கத்தியை வைத்திடும் ....
கிரெடிட் கார்டுகள் , லோன், வீட்டு மனை வாங்கச் சொல்லிடும் செய்திகள் ...
எப்போதாவது செய்தி அனுப்பும்
நண்பர்களின் செய்திகள் அழிக்கப்படுவதில்லை
இன்பாக்ஸ் மற்றும் இதயத்திலிருந்து .........
பதற வைத்திடும் செய்திகளும் வந்து சேரலாம்....
அலைபேசி நழுவிடும் மன நடுக்கத்துடன் ...
வகுப்பறைகளின் மௌனத்தினூடும் . கருத்தரங்கின் மென் ஒலியிலும்,
சப்தமின்றி  தொடர்ந்திடும் பரிமாற்றங்கள்..
அலைவரிசை கனவான்களை திட்டிக் கொண்டேனும்
தொடரப்படும்   பண்டிகைகளின் வாழ்த்துக்கள்...
நீளும் இரவுகளுடன்  நிகழ்ந்திடும்  காதல் பரிமாற்றங்கள்
முடிந்திடலாம் திருமணத்திலோ , அலைபேசி எண்ணின் மாற்றத்திலோ!!!!.
என்றேனும் ஒருநாள்
யாருமறியா  ஒற்றை பெயர் தாங்கிடும்
குறுஞ்செய்திகளால்  நிரம்பிடலாம் என் அலைபேசியும்
என்றே எதிர்பார்ப்புடன்   திறக்கப்படுகிறதென்  இன்பாக்ஸ் தினமும்!!!!

Face book

முகம் மறந்த ,முகவரி தொலைந்த நட்புகள்,
 காணக் கிடைக்கும்  காலப் பெட்டகம்.
அரட்டையில் துவங்கிடும் உறவுகளில்,
மலர்ந்திடும் புதிய நட்போ,
இதயங்கள் இடம் மாறும் அதிசயமோ   .....
கருத்துக் கணிப்பு, கவிதைத்திணிப்பு  , விவாத மேடை
என விரிந்திடும்- இது ஓர் கருத்துச் சந்தை .
முறிந்த நட்பும், பிரிந்த சொந்தங்களும்
நேசங்கள் புதுப்பிக்கும் வினோத களம் .
வங்கிக்கணக்கு இல்லையெனினும் ,இதன் இருப்பு
அத்தியாவசியம் என்பதே நிதர்சனம்

பிறந்த நாட்களும், திருமண விழாக்களும்
இதன் மூலமே இனி உலகறியும்...
முகங்களும் ,வயதும், கல்வியும் அறிகின்ற வகையில்
இதோர் நவீன யுக சுயம்வரம்....
பள்ளி, கல்லூரி குழுக்களென அன்பைப்  பரிமாறும் உன்னதம்
இங்கு மட்டுமே   சாத்தியம்...

பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் முகமும் ,
முப்பாட்டனின் பெயரும் தெரியாத நண்பருக்கு,
சிலியின் லின் ஆண்டர்சன்-  தோழர்
என்பதும் இதன்   யதார்த்தம்  .....

தேநீர் காலங்கள் ....

நட்சத்திர விடுதிகளின் அரையிருளில்
சர்க்கரைக் கட்டிகள் சூழ வைக்கப்படும் தேநீர் ..
விருந்துகள், விழாக்களில் திணிக்கப்படும் தேநீர். ..
கருத்தரங்குகள், சந்திப்புகளில் இடை நீட்டப்படும் தேநீர்
பாலுடன் தூள் கலக்கும் பாண்டிச்சேரியின் தேநீர்...
வடி நீருடன் பால் கலக்கும் தமிழகத் தேநீர்...
எலுமிச்சை தேநீர், மசாலா தேநீர், பச்சைத் தேநீர்...
பால் கலக்காத கறுப்புத் தேநீர்...
சர்க்கரை கலக்காத டயட்தேநீர் ...
எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு சுவைஎனினும்
எதுவும்  மிஞ்சமுடிந்ததில்லை
ஏலக்காய் வாசனையுடன்
அதிகாலையை எழுப்பும்
அம்மா  தயாரித்த தேநீரை !!!!

நகரும் வாழ்வு .....


பேருந்து நிலையங்களில் நுழையும் பேருந்துகளில்
லாவகமாய்த் தாவி ஏறிடும் அவன்
அண்ணே வேர்கடலை , அக்கா வேர்கடலை!! எனத் துவங்குகிறான்
வேர்கடலையைக் காட்டிலும்   சூடாய் இருக்கிறதவன் பேச்சு!!
பத்தோ, பதினைந்தோ பரபரப்பாய் விற்றுத்தீர்க்கிறான்,
சில நிமிட இடைவெளியில்....
வேர்கடலையில் விருப்பமில்லை எனினும்,
அவன் வயதை யோசிக்க விடாத
குரலுக்காக, வாங்கிக் கொள்கிறேன் ஒன்று....    
சில்லறையைத் தருகையில் , "அப்புறம்  வாங்கிக்கறேன்",
என ஆச்சரியப்படுத்துகிறான் ,..
நகரத்துவங்கும் பேருந்தும் , இறங்கச் சொல்லும் நடத்துநரும்,
அவன் உறுதியைக் குலைத்து விடுவதில்லை..
ஓடும் பேருந்திநின்றும்  குதித்துச் செல்கையிலும்..  
சில்லறை கொடுத்துச் செல்கிறான் தவறாமல்.
ஊரைத்தாண்டி பேருந்து விரையத் துவங்கினும்,
வேர்கடலை வாங்கச் சொல்வதாய்,
விடாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது  அவன் குரல்....
.

ஈரக் கவிதை ...


பக்கத்து வீட்டுக் குழந்தையின் கன்னத்தில் 
முத்தத்தில் நீ எழுதிய ஈரக்கவிதைகளை
உலராமல் படித்துவிடுகின்றன ,
என் இதழ்கள்
!!!!!!!!