Monday, September 12, 2011

Face book

முகம் மறந்த ,முகவரி தொலைந்த நட்புகள்,
 காணக் கிடைக்கும்  காலப் பெட்டகம்.
அரட்டையில் துவங்கிடும் உறவுகளில்,
மலர்ந்திடும் புதிய நட்போ,
இதயங்கள் இடம் மாறும் அதிசயமோ   .....
கருத்துக் கணிப்பு, கவிதைத்திணிப்பு  , விவாத மேடை
என விரிந்திடும்- இது ஓர் கருத்துச் சந்தை .
முறிந்த நட்பும், பிரிந்த சொந்தங்களும்
நேசங்கள் புதுப்பிக்கும் வினோத களம் .
வங்கிக்கணக்கு இல்லையெனினும் ,இதன் இருப்பு
அத்தியாவசியம் என்பதே நிதர்சனம்

பிறந்த நாட்களும், திருமண விழாக்களும்
இதன் மூலமே இனி உலகறியும்...
முகங்களும் ,வயதும், கல்வியும் அறிகின்ற வகையில்
இதோர் நவீன யுக சுயம்வரம்....
பள்ளி, கல்லூரி குழுக்களென அன்பைப்  பரிமாறும் உன்னதம்
இங்கு மட்டுமே   சாத்தியம்...

பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் முகமும் ,
முப்பாட்டனின் பெயரும் தெரியாத நண்பருக்கு,
சிலியின் லின் ஆண்டர்சன்-  தோழர்
என்பதும் இதன்   யதார்த்தம்  .....

No comments:

Post a Comment