Monday, September 12, 2011

S m s

குறுஞ்செய்திகளால் நிரம்பிடும் என் அலைபேசி....
காலை மாலை இரவு வணக்கங்களுடன் துவங்கிடும் தினமும் !!!
என்னை முட்டளாக்கிடும் எத்தனிப்புடன் பல !
புதிர்களுக்கான விடை தேடச் சொல்வதாய் சில  !
உருக்கிடும் நட்பு குறுஞ்செய்திகளுக்கோ,
உருக வைக்கும் காதல்  குறுஞ்செய்திகளுக்கோ,
உறைய வைத்திடும் புள்ளி விவரங்களுக்கோ பஞ்சமேயில்லை .......
கழுத்தினில் கத்தியை வைத்திடும் ....
கிரெடிட் கார்டுகள் , லோன், வீட்டு மனை வாங்கச் சொல்லிடும் செய்திகள் ...
எப்போதாவது செய்தி அனுப்பும்
நண்பர்களின் செய்திகள் அழிக்கப்படுவதில்லை
இன்பாக்ஸ் மற்றும் இதயத்திலிருந்து .........
பதற வைத்திடும் செய்திகளும் வந்து சேரலாம்....
அலைபேசி நழுவிடும் மன நடுக்கத்துடன் ...
வகுப்பறைகளின் மௌனத்தினூடும் . கருத்தரங்கின் மென் ஒலியிலும்,
சப்தமின்றி  தொடர்ந்திடும் பரிமாற்றங்கள்..
அலைவரிசை கனவான்களை திட்டிக் கொண்டேனும்
தொடரப்படும்   பண்டிகைகளின் வாழ்த்துக்கள்...
நீளும் இரவுகளுடன்  நிகழ்ந்திடும்  காதல் பரிமாற்றங்கள்
முடிந்திடலாம் திருமணத்திலோ , அலைபேசி எண்ணின் மாற்றத்திலோ!!!!.
என்றேனும் ஒருநாள்
யாருமறியா  ஒற்றை பெயர் தாங்கிடும்
குறுஞ்செய்திகளால்  நிரம்பிடலாம் என் அலைபேசியும்
என்றே எதிர்பார்ப்புடன்   திறக்கப்படுகிறதென்  இன்பாக்ஸ் தினமும்!!!!

No comments:

Post a Comment