Sunday, September 11, 2011

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

அலாரம் மறந்த காலைப்பொழுதுகள்

எப்போதும் கண்டிடா ஞாயிற்றின் ஞாயிறு .....

மனதிற்குகந்த   பாடல்களின் பின்னணியில்   தொடர்ந்திடும்  ....

பிரியாத  தலையணையும்  , கலையாத   தூக்கமும்

அம்மாவின்   அசைவச் சமையல் வாசனைகள் ,

தொலைக்கட்சியில்    தொலைகின்றன   கடிகார சப்தங்கள் ,

குழந்தைகளுடன் குழந்தையாய் மாறிப்  போகிறோம் .

கலகலத்திடும் வீடு எதிர்பாராத உறவுகளின்  வருகையில்.....

உதவி செய்வதான   சமையலறை  'அத்துமீறல்கள்'         

மாலையை  விழுங்குகிறது  ஒரு திரைப்படமோ , கடற்கரையோ ...

இரவு உணவு  கட்டாயமாய்  ஒரு விடுதியில் ஒவ்வொருவர் வீட்டிலும் .....

அயர்ச்சியுடன்  படுக்கையில் விழுந்து ,அலாரத்தை திருகி வைக்கையில்

மனம் ஏங்குகிறது இன்னொரு ஞாயிற்றின் விடியலுக்காய் !!!!!!!!

No comments:

Post a Comment