மொழிகள் அறியா வயதில்
கவிதைகளை அறிமுகம் செய்வித்தவள் நீ!!!
மூங்கில் வெளிகளில் புல்லாங்குழல் தேடித் திரிகையில்
இசையை அறிமுகம் செய்வித்தவள் நீ!!!
பூக்களை அறிந்திராத எனக்கு
புன்னகையின் அர்த்தம் கற்பித்தவள் நீ !!!
உடல் தாண்டா பெண்மை
அறிந்திராத எனக்கு
கண்கள் தாண்டாக் காதலை
கற்றுக்கொடுத்தவள் நீ !!!!!
வாழ்வெனும் முப்பரிமாண பிம்பங்களை
உணர்வித்தவள் நீ!!!
வெற்றுக் கிறுக்கல்களை
கவிதை, காவியமாக்கியவள் நீ !!!
இறுதியாய்
நிராகரிப்பெனும்
வாழ்வின் தீராத வலிகள்
உணர வைத்ததும் நீயே!!!!


No comments:
Post a Comment