Saturday, September 21, 2013

காதலும், கவிதையும்

காதல்
கவிதைத் தாயின்
செல்லக்குழந்தை!

*
காதலன்றி
மிகச் சிறந்த
கருப் பொருளை
கவிதை கண்டதில்லை

*கவிதை
காதல் ஊருக்கு
நுழைவு சீட்டு

*
கவிதை
காதல் குழந்தையின்
விருப்பப் பாடம்

*
கவிதை
காதல் பெண்
உடுத்தும்
மிகச் சிறந்த ஆடை

*
கவிதை
காதல்தெய்வம்
உவந்து கேட்கும்
பலி
 
*
கவிதை
காதலின்
கல்லறை வாசகம்

*
கவிதை
காதலின்
மறுபிறப்பு