புல்லினமும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவு வேளை
நடன மங்கையின் காற்சிலம்பு போல்,
விடாது ஒலிக்கும் முனகல் சப்தங்கள்
ஒட்டுமொத்த குத்தகையாய் casuality -ஐ எடுத்துவிட்ட கொசுக்கள் ,
காரிருள் சூழ்ந்த வானமாய்,
கண்களைச் சொக்கிடும் தூக்கம்...
எப்போது விடியும் - என ஏங்கித்தவிக்கும் விழிகள் ,
ஐந்து நிமிடத்திற்கொருமுறை அரை நிர்வாணப்படும் ஓய்வு,
காலை சேர்த்த நோயாளியின் அருகாமைக்கு
அனுமதி கேட்கும் நச்சரிப்புகள் ,
குடிபோதை வண்டியோட்டிகளுடன் , பரிசோதனைக்காய்
முழு போதையுடன் மாநகர காவலர்கள்...
தற்கொலை முயற்சியாய் - கை செய்யும்
வெள்ளைத்தாள் தவறுகள்
‘என்ன செய்வது டாக்டர்?’ என
ஓயாமல் தொல்லை தரும் செவிலிகள்!!!!
மூன்றாவது படுக்கையிலிருந்த நோயாளியின்
இறப்புக்கான காரணம் கேட்கும் கேள்விக்கணைகள் !!!!
காரணம் தேடி புத்தகங்களைப் புரட்டுகையில்,
படிக்க விடாமல் தடுத்தது அம்மாவின் உடல் நிலை,
"சற்றேனும் ஓய்வு கொடுங்கள்" என அலறுகிறேன் நான்
'எழுந்திருடா ! exam -க்கு நேரமாச்சு , ' - என்கிறான் நண்பன் ….
(A dream of exam going final year mbbs student .....to become a house surgeon)

No comments:
Post a Comment