பேருந்து நிலையங்களில் நுழையும் பேருந்துகளில்
லாவகமாய்த் தாவி ஏறிடும் அவன்
அண்ணே வேர்கடலை , அக்கா வேர்கடலை!! எனத் துவங்குகிறான்
வேர்கடலையைக் காட்டிலும் சூடாய் இருக்கிறதவன் பேச்சு!!
பத்தோ, பதினைந்தோ பரபரப்பாய் விற்றுத்தீர்க்கிறான்,
சில நிமிட இடைவெளியில்....
வேர்கடலையில் விருப்பமில்லை எனினும்,
அவன் வயதை யோசிக்க விடாத
குரலுக்காக, வாங்கிக் கொள்கிறேன் ஒன்று....
சில்லறையைத் தருகையில் , "அப்புறம் வாங்கிக்கறேன்",
என ஆச்சரியப்படுத்துகிறான் ,..
நகரத்துவங்கும் பேருந்தும் , இறங்கச் சொல்லும் நடத்துநரும்,
அவன் உறுதியைக் குலைத்து விடுவதில்லை..
ஓடும் பேருந்திநின்றும் குதித்துச் செல்கையிலும்..
சில்லறை கொடுத்துச் செல்கிறான் தவறாமல்.
ஊரைத்தாண்டி பேருந்து விரையத் துவங்கினும்,
வேர்கடலை வாங்கச் சொல்வதாய்,
விடாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது அவன் குரல்....
.
No comments:
Post a Comment