Sunday, October 16, 2011

சொற்பொருள் ...


நீ கடந்து செல்கிற தருணங்கள்  ....
உனக்கு  ஒரு சில  கணங்கள் ..
எனக்கோ யுகங்கள் தாண்டிய தவம் ...
உன் பார்வை  படும் தொலைவுகள்,
உனக்கு  முகங்கள் தேடும் எத்தனிப்பு.
எனக்கோ சொர்க்க வாசலின் நுழைவுச் சீட்டு,
நீ பேசிச் செல்கிற  வார்த்தைகள்,
உனக்கு சிறு குழந்தை கலைத்துப் போடுகிற  பொம்மைகள் .
எனக்கோ நுரையீரல் நிறைத்திடும் மூச்சுக்காற்று ...
உன் இதழ்களில் தவழவிடும் புன்னகை ..
உனக்கோ வழக்கமாய் உதிக்கிற சூரியன்
எனக்கோ நூற்றாண்டுகளில் நிகழும் 'சூப்பர் நோவா'....
உனது கண்கள் நீர் சொரிந்த நிகழ்வு
நான் கண்டு அறியாத எனது உயிரின் ரகசியம்
 உனது மூச்சுக் காற்று என்னில் விழும் நிகழ்தகவு
செவ்வாய் கிரகத்தில் தண்ணீரின்   இருப்பு.......!!!




No comments:

Post a Comment