நீ ஒரு புரியாத புதிர் -என்று சொன்னார்கள்
புரிந்து கொள்ளவே இயலாத
புதிரொன்றும் இல்லை - என்று எண்ணி ,
உன்னைப் புரிந்து கொள்ள முயல்கையில்
தெளிவாய்ப் புரிந்தது எனக்கு
நீ புரியாத புதிரொன்றும் இல்லை ..- யாரும்
புரிந்து கொள்வதை விரும்பாத புதிரென்று ...
யாருக்குமே விளங்காத புதிர் உன்னை
நான் மட்டும் புரிந்து கொள்ள முயற்சிக்கும்
புதிர்தான் விளங்கவில்லை இன்னும் ....

No comments:
Post a Comment