எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Sunday, December 25, 2011
மௌன சாட்சி
பொரை ஏறிடும் தருவாயில்
வந்து விழும் வார்த்தைகள் ..
அன்புக்குரியவர்கள் யாரும்
நினைத்திருக்கலாம் என்பதாக ....
நீதான்....என்பது தெரியுமாதலால்
துடைத்துக் கொள்கிறேன் தண்ணீரை
கடைவாய் உதிக்கிற புன்னகையும் சேர்த்து !!!..
No comments:
Post a Comment