
எல்லோரிடமும் இருக்கிறது..
முகங்கள் மறைக்குமொரு முகமூடி
மாறும் கணங்களின் எண்ணிக்கையில்,
பல வண்ணங்களில்......
துரிதமாய் மாற்றுவதிலும்,
தூக்கி எறிவதிலுமே சாமர்த்தியமுள்ளது !!
முகமூடியை மாற்ற மறந்தவர்கள்
பரிதாபத்திற்குரியவர்கள்!!!
முகமூடியே மறந்து போனவர்கள் துரதிர்ஷ்டசாலிகள் !!
பணத்திற்காய், பதவிக்காய், உதவிக்காய்,
பெண்ணிற்காய், மண்ணிற்காய்
மாறும் முகமூடிகள்!.... மாறும் எண்ணங்களின் வேகத்தில்....
கிழித்தெறிகின்ற போதிலும் ,
லாவகமாய் இன்னொன்று அணிகிறவர்கள்,
அசகாய சூரர்கள் !!!
நடுநிசிகளில், முகமூடி களைந்து
கண்ணாடியில் முகம் பார்க்கிறார்கள்
தூக்கம் வராத, மனசாட்சி உள்ளவர்கள் !!!!
கல்லறைக் குழியிலும்
முகமூடி கழற்ற மறுக்கிறார்கள்
சில தேர்ந்த நடிகர்கள் !!!
முகமூடி அணிவது சோசியலிசம் ஆன பின்பு
எண்ணிக்கைகளில் தான் வேறுபாடு !!!...
விற்கும் கடைகளில்,
வழக்கம் போல்
விழாக்காலத் தள்ளுபடி !!!!!......
No comments:
Post a Comment