Sunday, November 20, 2011

சார் ...டிக்கெட் ...டிக்கெட் ...


தமிழகம் முழுவது ம் பேருந்து கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளது ..என்பதறிவீர்கள் ..
.( இப்போது தலைப்பு புரிகிறதா ?)...இன்று கடலூரிலிருந்து  ..திட்டகுடி செல்ல 310  பிடித்தேன் ....கைக்குட்டை ..குடை ..மஞ்சள் பை ..குழந்தை !!!!வைத்து  இடம் போட்டிருக்கும் பேருந்தில் .ஒருவர் கூட ஏறியிருக்கவில்லை!! ...பக்கத்தில் விருத்தாசலம் செல்லும் தனியார் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது..  ..பேருந்து கட்டணம்   இருமடங்கு  உயர்ந்திருப்பது தெரிந்தும் , உட்கார்ந்து செல்லலாம் ..என்பதால் ,அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்தேன் ...பஸ் பாதி நிரம்பி , நகரத்துவங்கி ,நடத்துனர் வந்து டிக்கெட் கேட்டார் ..27 *2 =54 ..ஆனால்  53 தான் வாங்கினார்.(ஏமாற்ற வில்லை !!அதாவது டிக்கெட் விலை சரியாக இரண்டு மடங்கு இல்லை எனப் புரிந்தது  ..எனக்கு ஒரு ரூபாய் கம்மி ..)
. அட ஒரு ரூபாய் லாபம் என எண்ணிய வேளையில்...விருத்தாச்சலத்திற்கு டிக்கெட் கேட்ட  பக்கத்து இருக்கைக்காரர் விலையைக் கேட்டு ஏகத்துக்கும் டென்ஷன் ஆனார் ..( என்ன சார் படைப்பா நீலாம்பரி போல வெளி உலகமே தெரியாம இருக்கீங்க !!)..கடலூரிலிருந்து விருத்தாசலம் வரை  ஆளுங்கட்சி மற்றும் மாண்புமிகு அம்மையாரை  நல்ல வார்த்தைகளில் ஆரம்பித்து ஏக வசனம் ..அச்சில் ஏற்ற முடியாத வசனங்களில் கிழி கிழியென கிழித்தார் .....( நல்ல வேளை காதில் இயர் போனை மாட்டிக்கொண்டு விட்டேன் ..இருந்தும் காதிலிருந்து  இலேசாக தக்காளி சாஸ் எட்டிப் பார்த்தது .) ..நடத்துனர்  பத்து- இருபது ..இருபது - நாற்பது ,,இருபத்தைந்து - ஐம்பது ,என பிளாக் -ல் டிக்கெட் விற்கிற மாதிரி , அடித்து நகர்த்திக் கொண்டிருந்தார்....ஒரு கட்டத்தில் இலேசாகத் துவங்கிய சலசலப்பு ..வாக்குவாதமாகி ..கைகலப்பு நிகழக்கூடும் என அஞ்சத்  தோன்றியது ...ஒரு நபர் "கும்பகோணம் டெப்போ பஸ்ல 12  ரூபா தான் வாங்குனாங்க ,,, நீங்க 16  ரூபா கேட்குறிங்க ...வை , ஐ  வான்ட் டீடைல்ஸ் ?" என்க, "சார் இதான் எங்க டெப்போ நம்பர் ,,வேணும்னா கேட்டுக்கங்க " என கண்டக்டர்  கொடுத்த ..டெப்போ நம்பருக்கு போன் போட்ட நபர் .. "என்ன சார் பிஸி யாவே இருக்கு?"  என்றவர், கண்டக்டர் " உங்களை மாதிரி எத்தனை பேர் ட்ரை பண்றாங்களோ?" என்றதும் அடங்கிப் போனார் ..கண்டக்டர் எங்களிடம் திரும்பி "சார் ...நாங்க என்ன சார் பண்ணுவோம் ..எல்லாரும் நாங்க கொள்ளை அடிச்சி வீட்டுக்குக் கொண்டு போற மாதிரி கேள்வி கேட்குறாங்க !! இப்போ  கூட வயசானவங்க , ரொம்ப முடியாதவங்க னு தெரிஞ்ச ரெண்டு பேருக்கு டிக்கெட்டே போடலை .." என நெகிழ வைத்தார் ..(சே ... வினு சக்கரவர்த்தி மாதிரி அவ்வளவு பெரிய மீசை வைத்த .கண்டக்டருக்கு  இருக்கிற பாசம் கூட ...எல்லாரும் "அம்மா' அம்மா" என்று அன்போடு அழைக்க வேண்டும் என எதிர்பார்க்கிற அம்மையாரிடம் இல்லையே ...).அதன் பிறகு  எல்லாரின் கோபமும் அரசாங்கம் பக்கம் திரும்பியது .ஒரு நடுத்தர வயதுக்காரர் .."என்ன சார் ரெண்டு மடங்கு விலை ஏத்தி இருக்காங்க ...ரெண்டு ரூபா மூணு ரூபா ஏத்தி இருந்தா நமக்கு சுமை தெரியாதுல்ல" என்றார் .எம் . ஜி . ஆர் பெயர் கையில் பச்சை குத்தியிருந்த ஒரு கிழவி " நம்ம எம்ஜாரு கட்சியிலையா வெலைய ஏத்துனாக ( பாட்டி!!! அவரு போய் சேர்ந்து இருபது வருஷம் ஆகிப் போச்சு , இன்னமும் அவருக்கு தான் ஓட்டுப் போடுரீங்களா..வ்!!!!)   ஒரு கிராமத்து பெரியவர் .."ஏன்டா காசு வாங்கி , ஓட்டு போடாதிங்கடா - னு சொன்னா எவன்டா கேட்டிங்க..இப்போ அனுபவிக்கிறிங்க" பின்னாலிருந்து ஒரு குரல் " அதான் பாக்கெட்,கவர் லாம்   கரெக்டா வாங்கிநீங்கள்ள? " என நக்கலாக  ஒலித்தது ..எல்லாரும் ஏக காலத்தில் திரும்ப ,, குரலுக்குச் சொந்தமான கரை வேட்டிக்காரர்  பம்மி, தூங்குவது போல பாவ்லா செய்தார் ...இன்னொருவர் ...."சார் இவங்களை யார் சார் இலவச மிக்சி, கிரைண்டர் , லேப்டாப் - லாம் குடுக்கச் சொன்னது ..இப்போ டிக்கெட் விலை ரெண்டு மடங்கு ஏறிப் போச்சு !"என்றார் .( மேடம் நீங்க ஜெயிச்சுட்டிங்க ...இலவச மோகம்   ஆட்டிப்  படைக்கிற அடித்தட்டு மக்களிடமிருந்து ..இலவசம் வேண்டாம் என எண்ண வைத்திருக்கிறீர்கள் ! நீங்கள் சிறந்த ராஜ தந்திரிதான்) ...இந்த ரண களத்திலும் சில விஷயங்கள்...புல் போதையில் மட்டையாகி, கண்டக்டர் டிக்கெட் கேட்டதும் சட்டைப் பை காண்பித்து எடுத்துக் கொள்ளச் சொன்ன குடிமகன் ... பட்டன்களை கழட்டி விட்டு , ஐம்பதில் ஆக்சிலேட்டரை நிலை நிலை நிறுத்தி , ஹாயாக வெளியே  வேடிக்கை பார்த்தபடி வண்டியோட்டிய டிரைவர் ...தவிர எல்லோர் முகத்திலும் ஓர்  இறுக்கம் காணப்பட்டது !! என்ன செய்வது ...க்கு ..பட்டா .குலைச்சு தானே ஆகணும் !....

No comments:

Post a Comment