அன்புக்குரியவனின்
இடை வளைத்து
இறுக அணைத்திருக்கும்
பின்னிருக்கை நங்கை
கடந்து செல்கிற நொடியில்
இறுக்கம்
சற்றே தளர்த்தி
உள்நுழைகிற என் பிம்பத்தை
அகல விரித்த விழிகளில்
விழுங்கிக் கொள்கிறாள் - யாருமறியாமல்
இறுக்கம் தொடரினும்
எஞ்சிய ஒரு துளி,
இதழினோரம் வழிந்திடும் புன்முறுவலாய் !!!

No comments:
Post a Comment