திரும்பவும் திரும்பி வருவேன் என
எண்ணிச் செல்கிறேன்
திரும்பாமலே போகலாம் என்பது தெரிந்திருந்தும்,
கடந்து செல்கிறேன் என எண்ணிக் கொண்டு
பார்த்துச் செல்கிறேன் - திரும்பி
திரும்பவும் வரலாம் என்பதன் நிகழ் தகவு
எப்போதுமே சூனியத்திலிருந்து துவங்குகிறது
திரும்புத லோ விரும்புதலோ
நிகழ்ந்திடலாம் நமது எல்லையில் ...
கடக்க முடியா தருணங்கள்
முடக்கிப் போடும் எல்லையாய்
தீர்மானிப்பது எது...???
நானா? விதியா?? கடவுளா??
மூன்றும் தாண்டிய தொன்றா?
மூன்றும் சேர்வதுதான் என்றா ?
கடத்தலென்பது சார்பியல் விதியோ ??
எதுவுமில்லை என்பதுதான் மதியோ ?
விடையிருக்காத வினாக்கள்
ஆன்மீகமாய் அமானுஷ்யமாய் கடந்துபோகின்றன
கடந்து போகிற எல்லாவற்றையும் போலவே !!!!
எண்ணிச் செல்கிறேன்
திரும்பாமலே போகலாம் என்பது தெரிந்திருந்தும்,
கடந்து செல்கிறேன் என எண்ணிக் கொண்டு
பார்த்துச் செல்கிறேன் - திரும்பி
திரும்பவும் வரலாம் என்பதன் நிகழ் தகவு
எப்போதுமே சூனியத்திலிருந்து துவங்குகிறது
திரும்புத லோ விரும்புதலோ
நிகழ்ந்திடலாம் நமது எல்லையில் ...
கடக்க முடியா தருணங்கள்
முடக்கிப் போடும் எல்லையாய்
தீர்மானிப்பது எது...???
நானா? விதியா?? கடவுளா??
மூன்றும் தாண்டிய தொன்றா?
மூன்றும் சேர்வதுதான் என்றா ?
கடத்தலென்பது சார்பியல் விதியோ ??
எதுவுமில்லை என்பதுதான் மதியோ ?
விடையிருக்காத வினாக்கள்
ஆன்மீகமாய் அமானுஷ்யமாய் கடந்துபோகின்றன
கடந்து போகிற எல்லாவற்றையும் போலவே !!!!

No comments:
Post a Comment