பெரிய மனிதர்களின்
இல்லம் செல்கையில்
சொல்ல வேண்டி இருக்கிறது - தெரிவு செய்த காரணங்களை
வாயில் காப்போரிடமும்,
"வாய்" நிறைய வரவேற்பவரிடமும்..
அழைப்பு உள்ளிருந்தே என்பதுதான்
சொல்ல முடியாத உண்மை ...
வரவேற்கும் குரலின் தொனி
சற்றும் மாறவில்லை இம்முறையும்...
ஒளிந்து வாலாட்டுகிற நாயோ,
முதல் முறை குரைத்ததாய் ஞாபகம் ....
காரணங்கள் இருந்து போகட்டும் என்னவாகிலும்.
வந்த நேரமும் , வந்தவன் வயதுமே முக்கியம் - என்கிற
உலகப் பொது விதிகள் இதற்கும் பொருந்தும் ..
வந்து செல்வதில் ஆதாயங்கள் இருப்பின்,
புன்னகையின் நீளம் கூடிடலாம்,
சில மில்லி மீட்டர்கள் .
செல்கிற வீடுகளில் பாவையர் இருப்பின்
பார்வைகள் அனல் கக்கும் - நெற்றிக் கண் திறவாது
வந்தவன் பார்வையை குறை சொல்லி
சென்றபின் துவங்குகிற சொல்லாடல்கள்,
விழாத காதுகள்
கொடுத்து வைத்தவை ..
விழுந்து தொலைத்தால் ..மறத்தல் நலம் .
மறவாது செல்லாதிருத்தல் உன்னதம் ..அதி உத்தமம்
இல்லம் செல்கையில்
சொல்ல வேண்டி இருக்கிறது - தெரிவு செய்த காரணங்களை
வாயில் காப்போரிடமும்,
"வாய்" நிறைய வரவேற்பவரிடமும்..
அழைப்பு உள்ளிருந்தே என்பதுதான்
சொல்ல முடியாத உண்மை ...
வரவேற்கும் குரலின் தொனி
சற்றும் மாறவில்லை இம்முறையும்...
ஒளிந்து வாலாட்டுகிற நாயோ, முதல் முறை குரைத்ததாய் ஞாபகம் ....
காரணங்கள் இருந்து போகட்டும் என்னவாகிலும்.
வந்த நேரமும் , வந்தவன் வயதுமே முக்கியம் - என்கிற
உலகப் பொது விதிகள் இதற்கும் பொருந்தும் ..
வந்து செல்வதில் ஆதாயங்கள் இருப்பின்,
புன்னகையின் நீளம் கூடிடலாம்,
சில மில்லி மீட்டர்கள் .
செல்கிற வீடுகளில் பாவையர் இருப்பின்
பார்வைகள் அனல் கக்கும் - நெற்றிக் கண் திறவாது
வந்தவன் பார்வையை குறை சொல்லி
சென்றபின் துவங்குகிற சொல்லாடல்கள்,
விழாத காதுகள்
கொடுத்து வைத்தவை ..
விழுந்து தொலைத்தால் ..மறத்தல் நலம் .
மறவாது செல்லாதிருத்தல் உன்னதம் ..அதி உத்தமம்
I am unable to read your blog through mobile.. Many phones don't support tamil font :(
ReplyDelete