எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Wednesday, February 8, 2012
வருகை "பதிவு"
கடந்து போகிற கணப் பொழுதிலும்
உயர்த்திடும் புருவ கோபுரங்களிலும்,
கருவிழிகளின் ஈரப் பார்வையும் ,
இதழ்களின் ஓரம் குறு நகையும் தந்து
பதிவு செய்து கொள்கிறாய்
எனது வருகையை
யாருமறியாமலே !!!
No comments:
Post a Comment