'பறவை' என்று விளிக்கப் பட்டேன்; பறந்து காட்டப் பணிக்கப் பட்டேன்;
பறவையின் வாழ்வியல் அறிந்திலேன்;
பறத்தலின் விதிகளும் அறிந்திலேன்;
பறந்த கதை சொன்னவர்
பரவலானோர்;
மறந்து போனதாய்
நழுவினர் வகையாய் ;
இன்னும் சிலர் !
பறந்து காட்டுவோர் யாருமிலர் !
புரிந்ததை, புரிந்து கொள்ள
சொல்லுதல் ஏலுமோ ?
யான் பறப்பதும் ஓர் நாள் நிகழுமோ ?
பிறந்ததால் மட்டுமே,
பறந்து போதல் ஆகுமோ ?
பறந்தவர் திரும்பிடில் ,
இயம்பிடில்;
பறத்தல் சாத்தியம் ,
இது சத்தியம் !!!
No comments:
Post a Comment