எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Sunday, January 8, 2012
பொதிகை !!
புயலால் பாதிக்கப் பட்டு , பல பகுதிகளில் மின்சாரமே வராத நிலையில் , கேபிள்
இணைப்பு இல்லாததால் , வேறு வழியே இல்லாமல் பொதிகை சேனலை பார்த்தோம் . அட
அட.நான் ஒண்ணாப்பு படிச்சப்போ ஒளிபரப்பான 'எதிரொளி' ( ஞாபகம் இருக்கா ஒரு
அம்மணி கடுதாசி எடுத்து கொடுக்க , சோடா புட்டி கண்ணாடி போட்ட ஒருத்தர்
உட்கார்ந்து நிகழ்ச்சிகளைஎல்லாம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்று தீவிரமா
யோசிப்பாரே அதேதான் !!)...அவங்களைக் கூட விடுங்க ..அந்தக் கடிதங்களைஎல்லாம்
எழுதியவர்களிடம் ( 'மொழி' பாஸ்கர் வகையறாவோ??!!!!) ஒன்று கேட்கத்
தோன்றியது ,அண்ணே மொபைல் போனு, இண்டர்நெட்டு ஈ -மைலு எல்லாம் வந்தாச்சு ணே ,..இன்னமுமா கடுதாசி எழுதறிங்க ?? ( படைப்பா நீலாம்பரி போல பதினெட்டு வருஷமா நீங்க ஒரே சானலைத்
தான் பார்த்துட்டு இருக்கிங்களா ணே!!!) அதன் பிறகு ஒரு சீரியல் ....(ஸ்டுடியோ
-குள்ளயே வச்சு கேமரா பாத்து பாத்து பேசுவாங்களே அதேதான் !!)....போதும்
இதோடு நிறுத்திக் கொள்கிறேன் ...அதன் பிறகு ..கொலை முயற்சி வாழ்க்கை
சந்திக்க நேரலாம் !!
Subscribe to:
Post Comments (Atom)
Can never forget friday oliyum oliyum,monday aanaal adhu nijam, sunday morning srikrishna,captain vyum,sakthimaan, evening saapida vaanga, vayalum vaalvum,ethiroli, sunday movies, amul surabhi etc. etc.
ReplyDelete