எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Sunday, October 14, 2012
இரங்கற்பா
முப்போகமே விளையுமே மும்மாரி பொழியுமே
எப்போதுமே பசுமையே விளைநிலங்கள் - இப்போதோ
சப்தமிட்டு விற்பனையே மனைகளாக்கி மாளிகையாய்
தப்புவதும் கல்விக்கூடம் ஆம்
முப்/போ/கம் - நேர் நேர் நேர்- தேமாங்காய்- காய் முன் நிரை விளை/யு/மே - நிரை நேர் நேர்-புளிமாங்காய்- காய் முன் நேர் மும்/மா/ரிப்- நேர் நேர் நேர்-தேமாங்காய்- காய் முன் நிரை பொழி/யு/மே- நிரை நேர் நேர்- புளிமாங்காய்- காய் முன் நேர் எப்/போ/தும்- நேர் நேர் நேர்-தேமாங்காய்- காய் முன் நிரை பசு/மை/யாய் -நிரை நேர் நேர்-புளிமாங்காய்- காய் முன் நிரை விளை/நிலங்/கள்- நிரை நிரை நேர்-கருவிளங்காய்-காய் முன் நேர் இப்/போ/தோ- நேர் நேர் நேர்-தேமாங்காய்- காய் முன் நேர் வெப்/பமாய்- நேர் நிரை-கூவிளம்- விள முன் நிரை சிதி/லமாய்- நிரை நிரை-கருவிளம்- விள முன் நிரை மனை/களாய் -நிரை நிரை-கருவிளம்- விள முன் நேர் மா/ளிகை/யாய்- நேர் நிரை நேர்- கூவிளங்காய்-காய் முன் நேர் தப்/புவ/தும்- நேர் நிரை நேர்- கூவிளங்காய்- காய் முன் நேர் கல்/விக்/கூ/டம்-நேர் நேர் நேர்( நேர்)- தேமாங்காய்- காய் முன் நேர் ஆ/கும். காசு .......................................... வெண்பாவில் காய் முன் நேர், விள முன் நேர், மா முன் நிரை ஆகிய தளைகள் மட்டுமே வரும். ஆக இப்பாட்டில் தளை தட்டுகிறது.. பிழைகள் திருத்துவதற்கே : குறை காண்பதர்கன்று.. மன்னிக்கவும் பிழையெனில். பொருளால் பாடல் சிறப்பு... எதுகையும் மோனையும் பாடலுக்கு நன்றாக அமைந்துள்ளன.. நன்றி நண்பா...
தளை தட்டுகிறதென தலை தட்டி இடித்துரைத்தமைக்கு நன்றி..நேர்படப் பேசுவதே நட்பு..காய் முன் நேர் வெண்பாவில் வராது என்பதறிகிலேன்.திருத்திக் கொள்கிறேன்..வருந்துவதும் திருந்துவதும் தாமே வளர்ச்சிக்கு வழிகள்..
santhi pilaigal thavirthu kavithai arumai...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுப்/போ/கம் - நேர் நேர் நேர்- தேமாங்காய்- காய் முன் நிரை
ReplyDeleteவிளை/யு/மே - நிரை நேர் நேர்-புளிமாங்காய்- காய் முன் நேர்
மும்/மா/ரிப்- நேர் நேர் நேர்-தேமாங்காய்- காய் முன் நிரை
பொழி/யு/மே- நிரை நேர் நேர்- புளிமாங்காய்- காய் முன் நேர்
எப்/போ/தும்- நேர் நேர் நேர்-தேமாங்காய்- காய் முன் நிரை
பசு/மை/யாய் -நிரை நேர் நேர்-புளிமாங்காய்- காய் முன் நிரை
விளை/நிலங்/கள்- நிரை நிரை நேர்-கருவிளங்காய்-காய் முன் நேர்
இப்/போ/தோ- நேர் நேர் நேர்-தேமாங்காய்- காய் முன் நேர்
வெப்/பமாய்- நேர் நிரை-கூவிளம்- விள முன் நிரை
சிதி/லமாய்- நிரை நிரை-கருவிளம்- விள முன் நிரை
மனை/களாய் -நிரை நிரை-கருவிளம்- விள முன் நேர்
மா/ளிகை/யாய்- நேர் நிரை நேர்- கூவிளங்காய்-காய் முன் நேர்
தப்/புவ/தும்- நேர் நிரை நேர்- கூவிளங்காய்- காய் முன் நேர்
கல்/விக்/கூ/டம்-நேர் நேர் நேர்( நேர்)- தேமாங்காய்- காய் முன் நேர்
ஆ/கும். காசு .......................................... வெண்பாவில் காய் முன் நேர், விள முன் நேர், மா முன் நிரை ஆகிய தளைகள் மட்டுமே வரும். ஆக இப்பாட்டில் தளை தட்டுகிறது.. பிழைகள் திருத்துவதற்கே : குறை காண்பதர்கன்று.. மன்னிக்கவும் பிழையெனில். பொருளால் பாடல் சிறப்பு... எதுகையும் மோனையும் பாடலுக்கு நன்றாக அமைந்துள்ளன.. நன்றி நண்பா...
தளை தட்டுகிறதென தலை தட்டி இடித்துரைத்தமைக்கு நன்றி..நேர்படப் பேசுவதே நட்பு..காய் முன் நேர் வெண்பாவில் வராது என்பதறிகிலேன்.திருத்திக் கொள்கிறேன்..வருந்துவதும் திருந்துவதும் தாமே வளர்ச்சிக்கு வழிகள்..
ReplyDelete