அண்ணன் அணிவித்த ஸ்வெட்டர்
அப்பா வாங்கித்தந்த அலைபேசி
அம்மா போட்டுவிட்ட தங்க செயின்
அக்கா ஆசையாய் கொடுத்துவிடும் பாக்கெட் மணி
என்பதில் இருந்த ஆர்வமும் ஆசையும்
ஏனோ இருப்பதில்லை
எனக்கான சட்டையை
அறிவு ஜீவி அலைபேசியை
அழகியலான பைக்கை
நானே வாங்கிக் கொள்கிற போதும்...
No comments:
Post a Comment