Saturday, October 6, 2012

நெடுஞ்சாலை நாகரிகம்


கிழித்தெறியப் பட்ட  உடலும்,
முறுக்கி உடைக்கப்பட்ட எலும்பும்,
குருதி  தோய்ந்த சாலையும்,
இப்போதைப் போலவே
கடந்திருக்கிறேன்  

இதற்கும் முன்பும்
 
கண்ணீர் சிந்தவோ,
அஞ்சலி  செலுத்தவோ,
இடம்கொடா
வாகனங்களின்  வரவும், விரைவும்

சக்கர வியூகத்தில்
எந்திர முத்ததத்தில்
சாலையே சவக் காடாய்!
 
எல்லாமே நன்றுதான்
நீளும் நெடுஞ்சாலையில்,
வாழ்வெனும் பயணத்தில் 
நிற்க நிதானிக்க,
நேரமில்லை, மனமுமில்லை -
யாருக்கும்

உடல்களை,
தவறுகளை,
தன்னுள் புதைத்து
மௌனமாகிறது
நெடுஞ்சாலை
மரணத்தின் நெடியுடனே..






 

1 comment:

  1. காசிவிசுவநாதன்October 12, 2012 at 10:47 AM

    விளைநிலங்கள் விலைபோக‌
    வேளாண்மை வெளியேற‌
    ஆலைகள் விசம் கக்க‌
    கலியுகம் காணும் என் ஊரில்
    கிளைதேடும் பறவையே‍----உன்
    நிலைகண்டு நானும்
    உன்னோடு அழுகிறேன்!

    ReplyDelete